க. கிருஷ்ணசாமி

தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

க. கிருஷ்ணசாமி
Remove ads

கிருஷ்ணசாமி (K. Krishnasamy) ஒரு தமிழக அரசியல்வாதி, இவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஆவார்.

விரைவான உண்மைகள் க. கிருஷ்ணசாமி, சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

இளமை பருவம்

கிருஷ்ணசாமி பழைய கோயமுத்தூர் மாவட்டம், இன்றைய திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா, குடிமங்கலம், மசக்கவுண்டர் புதூர்[8] எனும் சிற்றூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1954-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 04-ஆம்[1] நாள் பிறந்தார். தந்தை கருப்புசாமி குடும்பனார் ஒரு விவசாயி. தாய் தாமரையம்மாள் [9] ஒரு இல்லத்தரசி. உயர்நிலை பள்ளிப்படிப்பினை பூளவாடி[10] என்ற ஊரிலும், புகுமுக வகுப்பினை அரசினர் கலைக்கல்லூரியிலும் முடித்தார்[11]. பின்னர் கோயமுத்தூர் வேளாண்மைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் வேளாண் படிப்பில்சேர்ந்தார். அங்கே 45-நாட்கள் மட்டுமே கல்வி பயின்றார். வேளாண்மைப் பல்கலைக் கழக துணை முதன்மையர் முனைவர் தானியல் சுந்தராசு அறிவுறுத்தலின்படி[12] வேளாண்மைக் கல்வியைத் தொடராமல் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் (1972–75) இளநிலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கே இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயின்று, கல்லூரி இடமாறுதல் அனுமதி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் (1975–78) மூன்றாம் ஆண்டு துவங்கி பயிற்சி மருத்துவர் பணி வரை இங்கேயே மருத்துவ கல்வி கற்றார். முதுநிலை மருத்துவத்தை கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரியில் (1982–84) முடித்தார்[13].

Remove ads

அரசியல் வாழ்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் என்கிற ஊரில் சாதிய வன்முறை ஏற்பட்டபோது, கோயம்புத்தூரில் இருந்து வந்து பாதிக்கப்பட்ட தேவேந்திர குல மக்களுக்காக வாதாடியவர்.[14] மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர் விடுதலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க தாமிரபரணி நதிக்குள் குதித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.

இவர் 1996 தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[15] பின்னர் இரண்டாவது முறையாக 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.[16] [17], அதே போல் தென்காசி தொகுதியில் 5 முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை அடைந்துள்ளார்[18] தேவேந்திர குல மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து இவரும் இவரது கட்சியும் செயலாற்றி வருகின்றன.

Remove ads

போராட்டங்கள்

  • விழுப்புரம் 12 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை, அதன் தொடர்ச்சியாக 22 சனவரி 1984 அன்று கைது செய்து மதுரை சிறையில் அடைப்பு.[சான்று தேவை]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads