சகாலின் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

சகாலின் மாகாணம்
Remove ads

சகாலின் மாகாணம் (Sakhalin Oblast, உருசியம்: Сахали́нская о́бласть, சகலீன்சுக்கயா ஓபிலஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது சகாலின் தீவு மற்றும் கூரில் தீவுகளை உள்ளடக்கியது. இந்த மாகாணம் 87.100 சதுர கிலோமீட்டர் (33,600 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் நிர்வாக மையம் மற்றும் பெரிய நகரம் தெற்கு-சகாலின்சுக் ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு .)[5]

விரைவான உண்மைகள் சகாலின் மாகாணம்Sakhalin Oblast, நாடு ...

இதன் மக்களில் கணிசமானவர்கள் முன்னாள், சோவியத் ஒன்றியத்தின் பிறபகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர், இந்த மாகாணத்தைத் தாயகமாக கொண்டவர்கள் நிவாகர் மற்றும் ஐனு இனக்குழுக்கள் ஆவர். ஐனுக்கள் தாய்மொழியை இழந்தவர்களாக உள்ளனர்.

Remove ads

மக்கள் வகைப்பாடு

இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு ); 546,695 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 709,629 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) 2012 முக்கிய புள்ளிவிவரம்

  • பிறப்பு: 6 316 (1000 ஒன்றுக்கு 12.8)
  • இறப்பு: 6 841 (1000 ஒன்றுக்கு 13.8) [9]

மொத்த கருத்தரிப்பு விகிதம்:[10]
2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ) இன குழுக்கள்:[5] 409.786 எண்ணிக்கையில் உள்ள உருசியர்களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் ஜப்பானியர் (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:

24.035 பேர்களின் இனத்தை நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய முடியவில்லை. காரணம் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாததுவே காரணம் ஆகும்.[11]

Remove ads

சமயம்

2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி[12] சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% "ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.

Remove ads

எண்ணெய், எரிவாயு, நிலக்கரி

பல ரசிய, பிரஞ்சு, தென் கொரிய, பிரித்தானிய, கனடிய, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தோண்டியுள்ளன.[13] 1920 களுக்குப் பின்னர் சோவியத் காலத்தில் நிலக்கரி மற்றும் மாங்கனீசு போன்றவற்றை வெட்டியெடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads