சக்மா மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்மா மக்கள் (Chakma people) பெரும்பான்மையான வங்காளதேசத்தின் சிட்டகாங் மலைப்பகுதிகளிலும் மற்றும் மியான்மர் நாட்டின் மலைப்பகுதிகளிலும், கிழக்கு இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவார்.[5]
இம்மக்கள் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இம்மக்கள் சக்மா மொழி, வங்காள மொழி மற்றும் இந்தி மொழிகளை பேசுகின்றனர். சக்மா பழங்குடி மக்கள் 31 குடிகளாக பிரிந்துள்ளனர். ஒவ்வொரு குடிக்கும் ஒரு குலத் தலைவர் உண்டு.
1971 வங்காள தேச விடுதலைப் போரின் போது ஆயிரக்கணக்கான சக்மா பழங்குடி மக்கள் சிட்டகாங் பகுதிகளிலிருந்து இந்தியாவின் திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் அகதிகளாக குடியேறினர். எனவே மிசோரம் மற்றும் திரிபுரா மாநில சட்டமன்றங்களில் சக்மா பழங்குடி மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது.[6]மேலும் திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழுக்களில் சக்மா பழங்குடி மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.[7]
Remove ads
சிட்டகாங் மலைத்தொடர் பிணக்குகள்
சிட்டகாங் மலைத்தொடரில் வாழும் சக்மா பழங்குடி மக்களுக்கும், வங்காளதேச இசுலாமியர்களுக்கும் 1977-ஆம் ஆண்டில் பிணக்குகள் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் பல நூற்றுக்கணக்கான சக்மா மக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இரு பிரிவினருக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது.[8][9]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads