சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்

தொலைக்காட்சி தொடர் From Wikipedia, the free encyclopedia

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்
Remove ads

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் அல்லது சனி என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் நவம்பர் 7, 2016 முதல் மார்ச்சு 9, 2018 வரை ஒளிபரப்பாகி 346 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற ஒரு இந்தி மொழி தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 6, 2018 முதல் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி சனவரி 25, 2019 அன்று 179 ஆத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. [1][2]

விரைவான உண்மைகள் சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன், வகை ...

இது இந்துக் கடவுள் சனீஸ்வரனின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

Remove ads

கதை

பிறப்பும் இளமைப்பருவமும்

தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவருக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது சிவபெருமான் அங்கு தோன்றி, கர்மங்களின் கடவுள் விரைவில் தோன்றவுள்ளதாகவும் அதுவரை போர் செய்வதை நிறுத்துமாறும் கூறுகிறார்.

இதற்கிடையில், சந்தியாதேவி, தன் கணவர் சூரியதேவனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்துகிறார். ஆகவே அவர் தன் தந்தை விஸ்வகர்மாவிடம் சென்று தீர்வு கேட்கிறார். அதற்கு அவர் சந்தியாவிடம் கடுந்தவம் புரியுமாறு கூறுகிறார். சந்தியா, அங்கிருந்து ஒரு மருந்தைத் திருடிச் சென்று விடுகிறார். அதன் மூலம் அவர் தன் நிழலுக்கு உயிர் கொடுத்துவிட்டு தவம் செய்ய புறப்படுகிறார்.

சந்தியாவின் நிழல், சூரியதேவனின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் அந்தக் குழந்தை ஒளியிழந்து காணப்பட்டதால் சூரியதேவன் அதைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். மேலும் தன் கதிர்கள் பட்டால் அக்குழந்தை எரிந்து சாம்பலாகி விடும் என்று சபிக்கிறார். இதனால் சந்தியாவின் நிழல், சூரியலோகத்தில், சூரியனின் கதிர்கள் படாமல் இருக்கும் ஒரு வனத்தில் தன் குழந்தையை மறைத்து வைக்கிறார். அவர் அக்குழந்தைக்கு சனி என்று பெயர் சூட்டினார்.

Remove ads

முக்கிய கதாபாத்திரங்கள்

  • ரோஹித் குறானா - சனீஸ்வரன்
  • கார்த்திகேய் மால்வியா- சனீஸ்வரன் (இளமைப்பருவம்)
  • ஜுஹி பர்மர்- சந்தியா தேவி மற்றும் சாயா தேவி (இரட்டை வேடங்கள்)
  • சலில் அங்கோலா - சூரிய தேவன்
  • குனால் பாக்ஷி - இந்திர தேவன்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads