அசுரர் (இந்து சமயம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசுரர்கள், (ⓘ) இந்துத் தொன்மவியல் வரலாற்றின்படி, அசுரர்கள் தேவர்கள் எனப்படும் சுரர்களின் ஒன்று விட்ட உடன்பிறந்தவர்கள் ஆவர். காசிபர் - திதி தேவி இணையருக்குப் பிறந்தவர்களே அசுரர்கள் ஆவர்.[1] அசுரர்கள் தீய குணங்கள் கொண்ட உயராற்றல் கொண்டவர்கள். அசுரர்களில் சில நற்குணம் கொண்டவர்கள் வருணனால் வழிநடத்தப்படும் ஆதித்தியர்கள் எனப்படுவர். இரணியாட்சன், இரணியன், இராவணன், சூரபத்மன், மகிசாசூரன் வாதபி போன்றோரை அசுரர்களுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தானவர்கள் மற்றும் தைத்தியர்களும் அசுரர்கள் என அழைக்கபடுவர். அசுரர்களின் முதல் தலைவராக இருந்தவர் விருத்திராசூரன் ஆவார். [2] அசுரர்களின் குலகுரு சுக்கிராச்சாரியார் ஆவர்.
வேதங்களில் இரக்கமும் நற்செய்கைகள் போன்ற சத்துவ குணம் கூடியவர்களை தேவர்கள் என்றும், அசுரர்கள் முன்கோபம், வீண் புகழ்ச்சி போன்ற இராட்சத குணம் படைத்தவர்கள் என்றும், முனிவர்கள் இயற்றும் வேள்விகளை அழிப்பவர்கள் என்றும் இறைவர்களை கொடுமைப் படுத்துபவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.[3]
இந்து சமயப் புராணங்கள், இதிகாசங்களில் அசுரர்களின் ஒரு பிரிவினர் இயற்கை ஆற்றல் மிக்க இயக்கர்கள் எனும் (யட்சர்கள் - யட்சினிகள்) என்றும், மனிதர்களை கொன்று உண்பவர்களை இராட்சதர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். [4][5] ரிக் வேதத்தில் அசுரர்கள் குறித்து எண்பத்து எட்டு முறை குறிப்பிட்டுள்ளது. .[6]
Remove ads
இந்துத் தொன்மவியல்
விஷ்ணு வரலாறு
திருப்பாற்கடலை தேவர்களுடன் அசுரர்களும் இணைந்து கடையும் போது வெளிப்பட்ட அமிர்தத்தை, விஷ்ணு பகவான் மோகினி வடிவம் எடுத்து அசுரர்களுக்கு அமிர்தம் வழங்காது தேவர்களுக்கு மட்டுமே வழங்கினார் என விஷ்ணு புராணம் கூறுகிறது.[7] விஷ்ணு அவ்வபோது அவதாரம் எடுத்து அசுரர்களை கொன்றார் என விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் கூறுகிறது.
சிவ புராணம்
அசுரர்கள் சிவனை வழிபட்டு தவமியற்றி வரங்களை பெற்று, இறையுலகத்தை கைப்பற்றி இறைவர்களை சிறை வைத்தனர் என சிவ புராணம் கூறுகிறது.[8][7] இறைவர்களுக்கும் - முனிவர்களுக்கும் துன்பம் இழைத்த சும்பன் - நிசும்பன் மற்றும் சுந்தன் - உப சுந்தன் எனும் அசுர இரட்டையர்களை சிவ பெருமான் அழித்தார்.
தேவி பாகவதம்
தேவி பாகவத்தில், பார்வதி துர்கை வடிவுடன் மகிசாசூரன் போன்ற கொடிய அசுரர்களை கொன்றார் என கூறுகிறது.
பாகவத புராணம்
பாகவத புராணத்தில், கம்சன் ஏவிய அரக்கர்களை கிருட்டிணன் கொன்றார் என அறிய முடிகிறது.
Remove ads
பௌத்தம்
பௌத்த சமயத்தில் குறிப்பாக மகாயான பௌத்தத்தில் அசுரர்கள் குறித்து அதிக செய்திகள் உள்ளன.
புகழ் பெற்ற அசுரர்கள் & அரக்கிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads