சசீந்திரன் முத்துவேல்

From Wikipedia, the free encyclopedia

சசீந்திரன் முத்துவேல்
Remove ads

சசீந்திரன் முத்துவேல் (Sasindran Muthuvel) பப்புவா நியூ கினியின் அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்த இவர் இவர் 2012 ஆம் ஆண்டு முதல் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் ஆளுநராகவும், அம்மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[1]

விரைவான உண்மைகள் சசீந்திரன் முத்துவேல்Sasindran Muthuvel, பப்புவா நியூ கினி, மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுனர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு, சிவகாசியில் பிறந்த சசீந்திரன் பெரியகுளம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். மலேசியாவில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர் 1999 ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினி சென்று மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகர் கிம்பேயில் உள்ள தனியார் சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.[2] 2000 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் மூடப்படவே, அந்நிறுவனத்தின் ஹமாமாஸ் டிரேடிங் என்ற கடை ஒன்றை இவர் குத்தகைக்கு எடுத்து நடத்தத் தொடங்கி, அதன் உரிமையாளர் ஆனார்.[2]

Remove ads

அரசியலில்

2012 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டு சீர்திருத்தக் கட்சியின் சார்பில் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண வேட்பாளராகப் போட்டியிட்டு[3] 24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[1] பப்புவா நியூ கினியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இந்தியர், மற்றும் முதலாவது தமிழர் என்ற பெருமைகளை இவர் பெற்றார்.[4]

Remove ads

விருதுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads