சட்ட நாடகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சட்ட நாடகம் (Legal drama) அல்லது நீதிமன்ற அறை நாடகம் (courtroom drama) என்பது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியின் வகையாகும், இது பொதுவாக சட்ட நடைமுறை மற்றும் நீதி அமைப்பு தொடர்பான கதைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த சட்ட நாடகம் கற்பனையான வழக்கறிஞர்கள், பிரதிவாதிகள் மற்றும் வாதியின் வாழ்க்கையை பின்தொடர்ந்து எடுக்கப்படுகின்றது.[1]

பொதுவாக காவல் அதிகாரிகள் அல்லது துப்பறியும் நபர்கள் குற்றங்களை விசாரித்து சரியான தீர்ப்பை வழங்குவதில் கவனம் செலுத்தும் காவல் குற்ற நாடகம் மற்றும் துப்பறியும் புனைகதைகளிலிருந்து இந்த வகைக்கதைகள் வேறுபட்டது. சட்ட நாடகங்களின் மையப் புள்ளி பெரும்பாலும் ஒரு நீதிமன்ற அறைக்குள் நிகழும் நிகழ்வுகளை கொண்டது.

Remove ads

திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படத்துறையில் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்டம் சார்ந்த திரைப்படங்கள் வெளியானது. 1955 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர். எம். கிருஷ்ணசாமி என்பவர் டாக்டர் சாவித்திரி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு இயக்குநர் தத்தினேனி பிரகாஷ் ராவ்[2] என்பவர் நல்ல தீர்ப்பு என்ற திரைப்படத்தை இயக்க ஜெமினி கணேசன், டி. எஸ். துரைராஜ், சக்கரபாணி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[3] 1971 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த கௌரவம், விதி, பிரியங்கா (1984), ஒரு தாயின் சபதம் (1987), மௌனம் சம்மதம் (1990), வா மகளே வா (1994), தோஸ்த் (2001), தமிழன் (2002), மனிதன்,[4] வாய்மை (2016)[5] போன்ற பல திரைப்படங்கள் தமிழ் மொழியில் வெளியானது.

Remove ads

தொலைக்காட்சி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads