சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சத்திரபதி சம்பாஜிநகர் நகரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
மாவட்டப் பெயர் மாற்றம்
இரண்டாவது மராத்தியப் பேரரசர் சம்பாஜி நினைவாக அவுரங்காபாத் மாவட்டத்தின் பெயரை சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம் எனப்பெயர் மாற்றி, சூலை 2022ஆம் ஆண்டில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராட்டிரா அரசின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.[2] இதனை அடுத்த வந்த ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு செப்டம்பர் 2023ல் உறுதி செய்தது.[3][4] மேலும் மாவட்டப் பெயர் மாற்றம் செய்ததை எதிர்த்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[5][6]
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 751,915 குடும்பங்களையும் கொண்ட அவுரங்காபாத் மாவட்டத்தின் மக்கள்தொகை 3,701,282 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 79.02% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 923 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 53,2659 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 858 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,39,368 மற்றும் 1,43,366 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 68.77%, இசுலாமியர்கள் 21.25%, கிறித்தவர்கள், 0.43% பௌத்தர்கள் 8.35%, சமணர்கள் 0.84%, மற்றும் பிறர் 0.36% ஆகவுள்ளனர். [7]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தை 10 வட்டங்களாகவும், 1362 கிராமங்களாகவும் பிரித்துள்ளனர்.[8]
வருவாய் வட்டங்கள்
- சத்திரபதி சம்பாஜிநகர் நகர்புற வட்டம்
- சத்திரபதி சம்பாஜிநகர் ஊரக வட்டம்
- சில்லோத் வட்டம்
- சோகாவ்ன் வட்டம்
- வைஜாப்பூர் வட்டம்
- கங்காபூர் வட்டம்
- பைத்தான் வட்டம் - (பைத்தான் நகரம்)
- புலம்ப்ரி வட்டம்
- கன்னாட் வட்டம்
- குல்தாபாத் வட்டம் - (குல்தாபாத்)
அரசியல்
சட்டமன்றத் தொகுதிகள்
இந்த மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] அவை
- பைட்டண் சட்டமன்றத் தொகுதி
- புலம்ப்ரி சட்டமன்றத் தொகுதி
- சில்லோடு சட்டமன்றத் தொகுதி
- அவுரங்காபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி
- அவுரங்காபாத் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- அவுரங்காபாத் மத்தியம் சட்டமன்றத் தொகுதி
- கன்னடு சட்டமன்றத் தொகுதி
- கங்காபூர் சட்டமன்றத் தொகுதி
- வைஜாபூர் சட்டமன்றத் தொகுதி
மக்களவைத் தொகுதிகள்
Remove ads
சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்
போக்குவரத்து
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads