உத்தவ் தாக்கரே

மகாராட்டிராவின் முன்னாள் முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia

உத்தவ் தாக்கரே
Remove ads

உத்தவ் பால் தாக்ரே (பிறப்பு: சூலை 27, 1960) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் மகாராட்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஆவார்.[1][2]. இவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் ஆவார். [3] மேலும் சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்ரே கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.

விரைவான உண்மைகள் உத்தவ் தாக்கரே, 18வது மகாராட்டிர முதலமைச்சர் ...

2002ஆம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், மராத்தி தினசரி செய்தித்தாளான சாமனாவை நிர்வகித்து வருகிறார். இவரது கட்சி 2002இல் பெருநகர மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றது. அதன்பிறகு, சனவரி 2003இல் கட்சியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார்.

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ராஷ்மி தாக்கரே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதித்யா, தேஜாஸ் எனும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ஆதித்யா, யுவசேனாவின் தலைவராக இருக்கிறார். ​​இளைய மகன் தேஜாஸ் நியூயார்க் மாநிலத்திலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர், மகாராட்டிராவின் பல்வேறு கோட்டைகள் மற்றும் வான்வழி காட்சிகளின் புகைப்படங்களை ஜஹாங்கிர் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.[4][5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads