சத்யாயனிய உபநிடதம்
ஆன்மீகம், துறவு வாழ்க்கை, துறவு பற்றிய இந்து நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்யாயனிய உபநிடதம் (Shatyayaniya Upanishad) ( சமக்கிருதம்: शाट्यायनीय उपनिषत् என்பது ஒரு சமசுகிருத உரையாகும். இது 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டது. மேலும் இது இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும்.[4][5] இந்த உரை சுக்ல யசுர்வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] மேலும் 20 சந்நியாச (துறவு நிலை) உபநிடதங்களில் ஒன்றாகும்.[1]
பண்டைய மற்றும் இடைக்கால சந்நியாச உபநிடதங்களின் தொகுப்பில் சத்யாயனிய உபநிடதம் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு ஆகும். இவற்றில் பெரும்பாலானவை அத்வைதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை.[6][7][8] இது வைணவத் தத்துவக் கண்ணோட்டத்தில் துறப்பதை முன்வைத்து முன்வைக்கிறது.[7][6] இருப்பினும், சத்யாயனிய உபநிடதம் உட்பட அனைத்து சந்நியாச நூல்களும் துறவறம், துறவு சடங்குகள் மற்றும் கண்ணோட்டம், யோகக் கலையின் பயன்பாடு, ஓம் மற்றும் பிரம்மம் பற்றிய தியானம், இறுதி யதார்த்தம், வாழ்க்கை விடுதலையின் நாட்டம், பயணம் செய்யும் நற்பண்புமிக்க எளிய வாழ்க்கை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.[9][10]
சத்யாயனிய உரை துறவறத்தை விரிவாகக் குறிப்பிடுகிறது. வேதங்கள் மற்றும் இந்து சமயத்தின் பண்டைய முதன்மை உபநிடதங்களிலிருந்து பாடல் துண்டுகளை உள்ளடக்கியுள்ளது.[3] எடுத்துக்காட்டாக, இது மைத்ராயனிய உபநிடதத்தின் 6.34 வது பகுதியின் வசனங்களுடன் ஆரம்பிக்கிறது. "மனம் மட்டுமே மக்களின் அடிமைத்தனத்திற்கும் துன்பத்திற்கும் காரணம்" என்றும், மனம் மட்டுமே அவர்களின் விடுதலைக்கும் காரணம் என்றும் கூறுகிறது.[11] மனிதனின் மனமே நித்திய மர்மம் மற்றும் அவனது எதிர்காலப் போக்கை வடிவமைக்கும் ஒன்று என்று அதன் மூன்றாவது வசனம் மீண்டும் வேத இலக்கியங்களைக் குறிப்பிடுகிறது. [11] மிக உயர்ந்த நித்திய உண்மையை அறிய, ஒருவர் பிரம்மத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும், அது வாசுதேவன் - விஷ்ணு என்ற வாசகம் கூறுகிறது.[12]
Remove ads
கால வரிசை
உபநிடதத்தின் தேதி அல்லது ஆசிரியர் பற்றித் தெரியவில்லை. ஆனால் அதன் இலக்கிய நடை மற்றும் அது குறிப்பிடும் நூல்களைப் பொறுத்தவரை, இது ஒரு இடைக்கால உரையாக இருக்கலாம்.[13]இந்தியவியலாளர்கள் பேட்ரிக் ஆலிவெல் , இசுப்ரோக்காப் ஆகிய இருவரும்1200 இல் தேதியிட்டனர். [14][15]
பெயர்கள்
இந்த உரையின் கையெழுத்துப் பிரதிகள் சத்யாயனி உபநிடதம் என்றும் சத்யாயனியோபநிடதம் என்ற தலைப்பில் காணப்படுகின்றன.[10][16] இராமனால் அனுமனுக்கு விவரிக்கப்பட்ட முக்திகா என்ற நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 99 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[17]
இதனையும் பார்க்கவும்
சான்றுகள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads