சத்யேந்திர நாராயண் சின்கா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்யேந்திர நாராயண் சின்கா (Satyendra Narayan Sinha) (12 ஜூலை 1917 - 4 செப்டம்பர் 2006) ஓர் இந்திய அரசியல்வாதியும், விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவருமாவார். நெருக்கடி நிலை காலத்தில் ஜெயபிரகாஷ் நாராயணின் 'முழுமையான புரட்சி இயக்கத்தின்' முன்னணி நபராகவும்,[5] பீகாரின் முதல்வராகவும் மூத்த இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவரும், ஏழு முறை வென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாவார்]].[6][7][8]
Remove ads
பின்னணி
சத்யேந்திர நாராயண் சின்கா பீகாரின், அவுரங்காபாத் மாவட்டம், பொய்வானில் ஒரு பிரபுத்துவ அரசியல் குடும்பத்தில் பிறந்தார். இவர் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர். இவர், இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முதல் துணை முதல்வராகவும் நிதியமைச்சருமாவார். [9]
அலகாபாத்தில் தனது மாணவப் பருவத்தை[10] லால் பகதூர் சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ் கழித்தார். அரசியல் சூழலில் வளர்ந்த சின்கா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து இலக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றார். பின்னர் , பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார், ஆனால் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர தனது வேலையை விட்டுவிட்டு 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் அரசியல் கைதிகளுக்கு சட்ட உதவி திட்டங்களை ஏற்பாடு செய்தார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
சுதந்திரத்திற்குப் பிறகு இவர் 1950இல் பீகாரிலிருந்து தற்காலிக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் காலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இளம் துருக்கியப் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார்.[11]
Remove ads
சொந்த வாழ்க்கை
நாட்டின் முதல் சத்தியாகிரக இயக்கமான சம்பரண் சத்தியாகிரக இயக்கத்தில் இராசேந்திர பிரசாத்துடன் சேர்ந்து[12] மகாத்மா காந்திக்கு நெருக்கமாக உதவி செய்த அனுக்ரா நாராயண் சின்கா இவரது தந்தையாவார்.[13][14][15] இவரது மனைவி கிஷோரி சின்கா வைசாலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவருடைய மருமகள் சியாமா சிங் அவுரங்காபாத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.[16] முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவரது மகன் நிகில் குமார்[17][18] இந்திய மாநிலமான நாகாலாந்தின் ஆளுநராகவும், கேரள ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.[19]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads