சியாமா சிங்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சியாமா சிங் (Shyama Singh) (பிறப்பு 26 நவம்பர் 1942 - 11 செப்டம்பர் 2017) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் [1] நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.[2] அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டர். இவர்,[3] நாகாலாந்து, கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக இருந்த நிகில் குமாரை திருமணம் செய்து கொண்டார். தில்லியில் நடந்த ஒரு சமூக நிகழ்வில் சந்தித்த இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின்[4] முயற்சியால் இவர் காங்கிரசில் சேர்ந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, தனது மாமனாரும் பீகார் முதல்வருமான சத்யேந்திர நாராயண் சின்கா மூலம் நபிநகர் சூப்பர் அனல் மின் திட்டத்தை புத்துயிர் பெற வைத்தார்.[4] சியாமா சிங் பீகாரின் பிரதேச காங்கிரசு குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[5]

விரைவான உண்மைகள் சியாமா சிங், இந்திய மக்களவை உறுப்பினர் for அவுரங்காபாத் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

சுதந்திர இந்தியாவின் முதல் நிதிச் செயலாளராக பணியாற்றிய[6] இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான சர் டி. பி. சிங்கிற்கும்,[7] பூர்ணியா மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாதுரி சிங்கிற்கும் மகளாகப் பிறந்தார். தனது பள்ளிக்கல்வியை பாட்னாவில் முடித்த இவர் பிறகு, இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். இவரது அண்ணன் என்.கே.சிங் (பீகாரின் 1964 தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி)[8] இந்தியாவின் வருவாய் செயலாளராகவும் பிரதமரின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய தம்பி உதய் சிங் பீகாரின் பூர்ணியா மக்களவைத் தொகுதியை இரண்டு முறை மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது மாமனாரும், மறைந்த முன்னாள் பீகார் முதல்வர் சத்யேந்திர நாராயண சின்காவும், அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து [9] ஏழு முறை தொடர்ந்து மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டர்.

Remove ads

குடும்பம்

இவரது கணவர் நிகில் குமார் நாகாலாந்தின் ஆளுநராகவும்,[10][11] கேரள ஆளுநராகவும் பணி புரிந்தார்.[12]

சியாமா சிங் தோட்ட ஆர்வலராவார்.[13][14] பிரம்மாண்டமான தோட்டத்தை சுமார் 30 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் கொண்டிருந்தனர்.[15] தில்லியில் நடைபெறும் அனைத்து மலர் கண்காட்சியிலும் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்

சியாமா, ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர்,[4] தனது நாடாளுமன்ற தொகுதியில் இவர் பள்ளிகள், மகளிர் கல்லூரி போன்ற பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கினா. மேலும், மாவட்டத்தில் ஒரு புதிய கணினி மையம் அமைக்கப்பட்டது.

மறைவு

2017 செப்டம்பர் 17 அன்று உடல்நலக் குறைவு காரணமாக இவர் காலமானார்.[5][7][16][17]

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads