பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம் என்பது 1921 ஜனவரி 3 முதல் 1937 ஏப்ரல் 1 வரை ஆளுகைக்குட்பட்ட பிரித்தானிய ஆட்சிப் பகுதியாகும். தற்போதைய உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் பகுதிகளை உள்ளடக்கியதாகும். 1921 இற்குப் பிறகு இலக்னோ இதன் தலைநகராகும். நைனித்தால் கோடைக் காலத் தலைநகராக இருந்தது.
ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் 1921 இல் 'பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம் என்ற பெயரில் மாற்றப் பட்டது. இந்திய அரசுச் சட்டம், 1919 இன்படி அதிக இந்தியர்கள் கொண்டு 123 பிரதிநிதிகள் கொண்ட சட்டமேலவை உருவாக்கப்பட்டது. வேளாண்மை, சுகாதாரம், கல்வி மற்றும் உள்ளாட்சி போன்ற துறைகளை நிர்வகிக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் முக்கிய துறைகளான நிதி, காவல் மற்றும் பாசனத் துறைகள் அளுநரிடம் இருந்தது. முகமத் அலி முகமத்கான்(உள்துறை), சி.ஒய். சிந்தாமணி(கல்வி மற்றும் தொழில்), ஜகத் நரைன் முல்லா(உள்ளாட்சி) ஆகியோர் பொறுப்புகளை வகித்த முக்கிய அமைச்சர்களாவர்[1] 1937 இல் வேறு சில பகுதிகளுடன் ஐக்கிய மாகாணமாக மாற்றப்பட்டது.
Remove ads
நிர்வாகப் பகுதிகள்
பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணம் ஒன்பது வருவாய் கோட்டங்களாகவும் 48 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.
- மீரட் பிரிவு
- ஆக்ரா பிரிவு
- ரோகில்கண்ட் பிரிவு
- அலகாபாத் பிரிவு
- ஜான்சி பிரிவு
- பெனாரஸ் பிரிவு
- கோரக்பூர் பிரிவு
- குமாவுன் கோட்டம்
- அல்மோரா மாவட்டம்
- நைனித்தால் மாவட்டம்
- கார்வால் மாவட்டம்
- லக்னௌ பிரிவு
- பைசாபாத் பிரிவு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads