சந்திரபோஸ் (இசையமைப்பாளர்)

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சந்திரபோஸ் (Chandrabose; 11 சூலை 1950 – 30 செப்டம்பர் 2010[1]) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும், நடிகரும் ஆவார்[2][3][4]. 1977 முதல் 90களின் ஆரம்பம் வரை இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

விரைவான உண்மைகள் சந்திரபோஸ், பிறப்பு ...
Remove ads

இசையமைப்பாளராக

வி.சி. குகநாதனின் இயக்கத்தில் 1977-ஆம் ஆண்டு வெளிவந்த 'மதுரகீதம்' படத்தின் மூலம் அறிமுகமான சந்திரபோஸ் தொடக்க காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். எம். எஸ். விஸ்வநாதன் இசையில் 'ஆறு புஷ்பங்கள்' படத்தில் சந்திரபோஸ் பாடிய "ஏண்டி முத்தம்மா" என்ற பாடல் அவரை மிகப் பிரபலமாக்கியது.

பின் 'மாங்குடி மைனர்', 'மச்சானை பார்த்தீங்களா' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். 'மச்சானைப் பார்த்தீங்களா' படத்தில் இடம்பெற்ற "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் என்றும் நினைவில் நிற்கும் பாடலாகும். இதைத் தொடர்ந்து 'மனிதன்', 'அண்ணா நகர் முதல் தெரு', 'ராஜா சின்ன ரோஜா' உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். 'மனிதன்' படத்தில் வரும் "வானத்தைப் பார்த்தேன்", "மனிதன் மனிதன்", 'அண்ணா நகர் முதல் தெரு' படத்தில் இடம்பெற்ற "மெதுவா மெதுவா", 'சங்கர் குரு'வில் இடம் பெற்ற "காக்கிச் சட்ட போட்ட மச்சான்", 'மக்கள் என் பக்கம்' படத்தில் வரும் "ஆண்டவனைப் பாக்கணும்" போன்ற பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. வி. சேகரின் இயக்கத்தில் வெளிவந்த 'நான் பெத்த மகனே' திரைப்படத்தில் இவர் கடைசியாக இசையமைத்திருந்தார்.

Remove ads

நடிகராக

அண்மைக்காலங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்து வந்தார். 'கத்திக் கப்பல்' படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. 'சூரன்' என்ற படத்திலும் நடித்தார். 'மலர்கள்', 'திருப்பாவை', உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.

12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடித்த இவர், கலைஞர் நடித்த 'மணிமகுடம்', கலைஞரின் 'பராசக்தி' நாடகம் ஆகியவற்றிலும் நடித்திருக்கிறார்.

Remove ads

இவர் இசையமைத்த சில திரைப்படங்கள்

இவர் இசையமைத்த சில புகழ் பெற்ற பாடல்கள்

  • பொய் இன்றி மெய்யோடு (சரணம் ஐயப்பா)
  • மாம் பூவே (மச்சானைப் பாத்தீங்களா)
  • காக்கிச்சட்ட போட்டமச்சான் (சங்கர்குரு)
  • ரவி வர்மன் எழுதாத கலையோ (வசந்தி - 1988)
  • சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா (ராஜா சின்ன ரோஜா)
  • பச்ச புள்ள அழுதிச்சின்னா பாட்டுப் பாடலாம் (புதிய பாதை)
  • தில்லிக்கு ராஜா-ன்னாலும் பாட்டி சொல்லத் தட்டாதே
  • காளை காளை முரட்டுக் காளை (மனிதன்)
  • சின்ன சின்ன பூவே(சங்கர் குரு)
  • சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் (சொந்தககாரன்)
  • மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு (அண்ணாநகர் முதல் தெரு)
  • வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை...
  • தோடி ராகம் பாடவா மெல்லப்பாடு..(மாநகர காவல்)
  • நீலக்குயில்கள் ரெண்டு.. (விடுதலை)
  • பூ பூத்ததை யார் பார்த்தது (கதாநாயகன்)
Remove ads

இவர் பாடிய சில பாடல்கள்

  • பூஞ்சிட்டுக் குருவிகளா..
  • ஏண்டி முத்தம்மா.. (ஆறு புஷ்பங்கள்)

மறைவு

நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி 2010 செப்டம்பர் 30 இல் இறந்தார்[5][6]. மறைந்த சந்திரபோசுக்கு இராஜகுமாரி, கீதா என்ற இரு மனைவிகளும், சந்தோஷ், வினோத் சந்தர் என்ற இரு மகன்களும், கௌரி என்ற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads