சந்திரப் பிரமிடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரப் பிரமிடு (Pyramid of the Moon) மத்திய அமெரிக்க கண்டத்தின் மெக்சிகோ நாட்டின், மெக்சிகோ மாநிலத்தில் உள்ள பண்டைய தியோத்திவாக்கன் நகரத்திற்கு மேற்கே மலையடிவாரத்தில் அமைந்த ஞாயிற்றுப் பிரமிடுக்கு அடுத்த இரண்டாவது பெரிய பிரமிடு ஆகும். இந்த சந்திரப் பிரமிடு கிபி 200-க்கு முன்னர் நிறுவப்பட்டதாகும். யுனெஸ்கோ உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான இப்பிரமிடை உலக பாரம்பரியக் குழு நிருவாகம் செய்கிறது.
இப்பிரமிடு செவ்விந்தியர்களால் கிபி 100 - 450 இடைப்பட்ட காலப்பகுதியில் நிறுவப்பட்ட கோயில் வளாகம் ஆகும்.[1] இப்படிக்கட்டுகளுடன் கூடிய இப்பிரமிடின் மேற்பகுதியில் மனிதர்களையும், விலங்குகளையும் கடவுளுக்கு பலியிடுவதற்கான சதுர வடிவில் மேடை போன்ற பகுதி உள்ளது. மேலும் இப்பிரமிடில் பலி உயிர்களை புதைக்கும் பகுதிகளும் இருந்தன.
பல ஆட்சியாளர்களின் காலத்தில் ஏற்பட்ட கருத்தியல் அடிப்படையில் கிபி 250 - 400 இடைப்பட்ட காலத்தில் இந்த சந்திர பிரமிடு வளாகம் உருவானது. இந்த பிரமிடின் மேல் தளத்தில் கருவுறுதல், பூமி, மற்றும் படைப்பின் தெய்வமான தியோதிஹுகானின் பெரிய தெய்வத்தின் கோயில் அமைத்து, தெய்வத்தின் நினைவாக விழாக்கள் நடத்தப்பட்டது. இந்த மேல் தளமும், பிரமிட்டின் அடிப்பகுதியில் காணப்படும் சிற்பமும் செவ்விந்தியர்களின் தாய்க் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தாய்க்கடவுளின் பலிபீடத்திற்கு எதிரே சந்திர வளாகம் உள்ளது. வளாகத்தில் ஒரு மைய பலிபீடமும், உள் பிளவுகளுடன் கூடிய அசல் கட்டுமானமும் உள்ளன, இதில் நான்கு செவ்வக மற்றும் மூலைவிட்ட அமைப்புகள் உள்ளது. அவை "தியோதிஹுகான் கிராஸ்" என்று அழைக்கப்படுகிறது.

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads