மெக்சிக்கோ மாநிலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெக்சிக்கோ மாநிலம் (State of Mexico, எசுப்பானியம்: Estado de México) மெக்சிக்கோவின் 31 மாநிலங்களில் ஒன்றாகும். மெக்சிக்கோ நகரம் 32ஆவது கூட்டரசு மாவட்டமாக 32வது நிர்வாகப் பிரிவாக உள்ளது. மிகுந்த மக்கள்தொகை உள்ள மாநிலமாக உள்ளது. இதில் 125 நகராட்சிகளும் தலைநகரமான டோலுக்காவும் அடங்கியுள்ளன.
மெக்சிக்கோ மாநிலத்தின் எசுப்பானியப் பெயரான எசுட்டோடா டெ மெக்சிக்கோ என்பதை சுருக்கமாக "எடோமெக்சு" என்கின்றனர். இது மெக்சிக்கோவின் தெற்கு-மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் குயெரெடரோ, இடால்கோ மாநிலங்களும் தெற்கில் மோரெலோசு, குயிர்ரெரோ மாநிலங்களும் மேற்கில் மிக்கோகான் மாநிலமும் கிழக்கில் டிலாக்சாலா, புவெப்லா மாநிலங்களும் உள்ளன; இந்த மாநிலம் கூட்டரசு மாவட்டதை சூழ்ந்துள்ளது.
இந்த மாநிலம் ஆசுடெக் பேரரசின் ஆட்சிப்பகுதியாக இருந்தது. எசுப்பானியாவின் குடியேற்றக் காலத்தில் இது புதிய எசுப்பானியாவின் அங்கமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு, புதிய நாட்டிற்கு மெக்சிக்கோ நகரம் தலைநகரமானது; தலைநகரப்பகுதி மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், மாநிலம் மேலும் பிரிக்கப்பட்டு இடால்கோ, குயெர்ரெரோ, மோரெலோசு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்தப் பிரிவினைகளுக்குப் பறகு மாநிலம் தற்போதைய அளவை எட்டியுள்ளது.
மெக்சிக்கோவின் 1917ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்த மாநிலத்தின் பெயர் மெக்சிக்கோ என்பது மட்டுமே; ஆனால் நாட்டின் பெயரிலிருந்தும் நகரத்தின் பெயரிலிருந்தும் வேறுபடுத்துவதற்காக இது பரவலாக எசுட்டாடொ டெ மெக்சிக்கோ என்றே அழைக்கப்படுகின்றது.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads