சனநாயகத் தேசியக் கூட்டணி (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சனநாயகத் தேசியக் கூட்டணி (Democratic National Alliance) என்பது இலங்கையில் நடப்பில் உள்ள ஒரு அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இக்கூட்டணி இளைப்பாறிய ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையில் உருவாக்கப்பட்டு 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இக்கூட்டமைப்பில் பின்வரும் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன[1]
- மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)
- சனநாயகத் தேசிய முன்னணி
- சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
- மக்கள் தமிழ் காங்கிரஸ்
- முஸ்லிம் அமைப்பின் குரல்
2010 மார்ச் மாதத்தில் ருகுணு மக்கள் கட்சி இக்கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தது. நவ சிகல உறுமய என்ற கட்சி 2010 நவம்பரில் இக்கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டது. சனநாயகத் தேசியக் கூட்டணி தனிக் கட்சியாக தேர்தல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கான விண்ணப்பம் 2011 சனவரியில் நிராகரிக்கப்பட்டது.
Remove ads
2010 பொதுத் தேர்தல்
2010 தேர்தலில் இக்கூட்டணி தேசிய ரீதியாக 5% இற்கும் சற்று அதிக வாக்குகளைப் பெற்று 225 இருக்கைகளைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஏழு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இது 2010 அரசுத்தலைவர் தேர்தலில் பொன்சேகா பெற்ற 40% வாக்குகளை விட மிகக் குறைவானதாகும். அப்போது அவருக்கு முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றவை ஆதரவளித்திருந்தன. 2010 நாடாளுமன்றத் தேர்தலில் சரத் பொன்சேகா, அர்ஜுன றணதுங்க, தொழிலதிபர் டெரின் அலஸ் , மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2010 அக்டோபர் 7 இல் இழந்தார். இவருக்குப் பதிலாக ஜயந்த கேட்டகொட 2011 மார்ச் 8 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads