இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010

From Wikipedia, the free encyclopedia

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010
Remove ads

2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் ஆறாவது அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற தேர்தல் ஆகும். இலங்கையின் தற்போதைய அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலம் 2011 இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு 2009 நவம்பர் 23 ம் நாள் அறிவிக்கப்பட்டது[1]. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 17, 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன, தேர்தல்கள் 2010, சனவரி 26 இல் இடம்பெற்றது[2].

விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...

2005 அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக முன்னாள் இலங்கை இராணுவத் தலைவர், ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்தன.

57.88 விழுக்காடுகள் வாக்குகளைப் பெற்று அதிபர் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்[3][4]. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் 16 மாவட்டங்களில் ராஜபக்ச முன்னணி பெற்றார். பொன்சேகா 40% வாக்குகளைப் பெற்றார். இவர் முன்னணி பெற்ற மாவட்டங்கள் அனைத்தும் தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும். ஏனைய 20 போட்டியாளர்களும் 2.0% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.

Remove ads

வேட்பாளர்கள்

முடிவுகள்

மாவட்ட முடிவுகள்

மாவட்ட ரீதியாக அதிகாரபூர்வமான முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன[5].

ராஜபக்ச வெற்றி பெற்ற மாவட்டங்கள்
பொன்சேகா வெற்றி பெற்ற மாவட்டங்கள்
மேலதிகத் தகவல்கள் மாவட்டம், மாகாணம் ...

தேசிய மட்ட முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads