சபரி (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

சபரி (திரைப்படம்)
Remove ads

சபரி மார்ச் 20, 2007 ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினை சுரேஷ் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களாக விஜயகாந்த், ஜோதிமயி, மாளவிகா, மகாதேவன், ராஜஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் சபரி, இயக்கம் ...
Remove ads

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

காவல்துறையின் தேடுதல் வேட்டை ஒன்றின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகித் தப்பி வரும் குற்றவாளி ஒருவனுக்கு அவசர சிகிச்சை செய்கிறார் மருத்துவர் சபரி (விஜயகாந்த்). அதன் பின்னர், குற்றவாளியை காவல்துறையினரிடம் ஒப்படைக்கிறார். இதனால் கோபமுற்ற குற்றவாளியின் கும்பல், சபரியை பழி தீர்க்க ஆயத்தமாகிறது. அதன்பின், இரு தரப்புக்கும் இடையே நடக்கும் போரே திரைக்கதையாகும்.

Remove ads

நடிகர்கள்

மேலதிகத் தகவல்கள் நடிகர்கள், பாத்திரம் ...

பாடல்

இப் படத்திற்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார்.

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடியவர்கள் ...

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "சமூக ஆபரேஷனுக்கு கத்தி எடுக்கிற டாக்டர்தான் ‘சபரி’... ஈழத் தமிழர்கள் பற்றிச் சீறலுடன் விஜயகாந்த் கேள்வி கேட்கும் இடத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார். விஜயகாந்த்துக்குக் கத்தி கொடுத்தவர்கள், ஃபிலிமுக்கு கொஞ்சம் கத்திரியும் கொடுத்திருந்தால் ஆபரேஷன் சுமுகமாக இருந்திருக்கும்." என்று எழுதி 39/100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads