சமிக் பட்டாச்சார்யா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமிக் பட்டாச்சார்யா (Samik Bhattacharya-பிறப்பு 5 நவம்பர் 1963) என்பவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 3 ஏப்ரல் 2024 முதல் மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான[1] பட்டாச்சார்யா 2014 முதல் 2016 வரை மேற்கு வங்க சட்டப்பேரவையின் பாசிர்கத் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராக இருந்தார். 2020 முதல் 2024 வரை மேற்கு வங்கத்தின் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.[2] [3]
2024ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக சமிக் பட்டாச்சார்யா பரிந்துரைக்கப்பட்டார்.சமிக் பட்டாச்சார்யா ஏப்ரல் 04 அன்று புதிய மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads