சமூக நீதி
தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையிலான நியாயமான மற்றும் நியாயமான உறவுகளின் கருத்து From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமூக நீதி (Social justice) என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. பொதுவாக வேறுபாடுகளைப் பொருளாதாரப் பரவல், தனிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சமூக செல்வாக்கின் மூலம் இதனைக் கணிக்கலாம். மேற்கத்திய நாடுகள் மற்றும் பழமையான ஆசிய நாடுகளில் சமூக நீதி என்ற கருத்தாக்கமானது தனிநபர்களின் சமூக செயல்பாடுகளுக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்து, பாகுபாடற்ற நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்துவதாகும்.[1][2][3] தற்காலத்தில் உலகளாவிய பல சமூக அமைப்புகள் சமூகப் பெயர்ச்சிக்கான தடைகளை உடைத்து, சமூகப் பாதுகாப்பை உண்டாக்கி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கலைக்கிறது.[4][5][6][7][8]
சமூக நீதி மூலம் ஒரு சமூகத்தில் உள்ள அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களின் உரிமையையும் கடமையையும் உறுதிசெய்து, சமுதாயத்தின் ஆதாயங்களையும் சுமைகளையும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. வரி, சமூகக் காப்பீடு, பொது உடல்நலவியல், பொதுக்கல்வி, பொதுப்பணி, தொழிலாளர் சட்டம், சந்தை ஒழுங்காணையம் போன்ற நிறுவனங்களில் வளங்களையும், வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்ளமுடிகிறது.[9]
Remove ads
தமிழ்நாட்டில்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பட்டியல் பழங்குடி அமைச்சகம் போன்ற அமைச்சகங்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உட்படச் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு சமூகநீதியையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்துகிறது.[10]சாதி, மொழி, மதம், பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனம் போன்ற முறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்விவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, கல்விக்கு உதவித் தொகை போன்ற பல திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன.[11]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads