ஆசிய மக்கள்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசிய மக்கள்:ஆசியன் மக்கள் அல்லது ஆசிய மக்கள் ஆசியாவின் மக்கள்தொகையில் ஒரு பகுதியினர்[7].ஆசியாவில் உள்ள இனக்குழுக்களை வகைப்படுத்துவதற்காக பல்வேறுபட்ட வரையறைகள் மற்றும் புவியியல் தரவுகள் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் வழங்கப்படுகின்றன.[8]
Remove ads
மக்கள்தொகைப் புள்ளியியல்
உலகில், மனித வளர்ச்சிச் சுட்டெண் மிகக் கூடுதலாக வளர்ந்திருப்பது கிழக்காசியாவிலேயே ஆகும். முன்னேற்றம் நலவியல், கல்வி, வருமானம் என்பவை தொடர்பிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளில் சராசரி மனித வளர்ச்சிச் சுட்டெண் இரண்டு மடங்காகியுள்ளது. 1970ல் இருந்து மனித வளர்ச்சிச் சுட்டெண் மேம்பாட்டின் அடிப்படையில் உலகில் இரண்டாவது நிலையில் இருக்கும் சீனாவே, கல்வி, நலவியல் ஆகியவற்றில் அல்லாது வருமான அடிப்படையில் மட்டும் முதல் பத்துக்குள் அடங்கிய ஒரே நாடு ஆகும். சீனாவின் தனி நபர் வருமானம் கடந்த நான்கு பத்தாண்டுகளில் 21 மடங்கு ஆகியுள்ளதுடன், இக்காலப் பகுதியில் பல நூறு மில்லியன் மக்களை வறுமை நிலையிலிருந்து உயர்த்தியுள்ளது. இருந்தாலும், பள்ளிச் சேர்க்கை, வாழ்நாள் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் சீனா இப்பகுதியின் சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடுகளுள் அடங்கவில்லை.[9]
1970 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக நலவியல், கல்வி ஆகியவற்றின் மேம்பாட்டின் அடிப்படையில் விரைவாக வளரும் நாடாகத் தென்னாசிய நாடான நேப்பாளம் விளங்குகிறது. இதன் தற்போதைய வாழ்நாள் எதிர்பார்ப்பு 1970 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 25 ஆண்டுகள் கூடுதலானது. நேப்பாளத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள ஐந்து சிறுவர்களில் நான்குக்கும் கூடுதலானவர்கள் இப்போது தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஐந்து பேருக்கு ஒருவராகவே இருந்தது.[9]
மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் சப்பானும், தென்கொரியாவும் முறையே 11, 12 ஆவது இடங்களில் உள்ளன. இவை மிக உயர்ந்த மனித வளர்ச்சி வகைக்குள் அடங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து, ஆங்காங் 21 ஆவது இடத்திலும், சிங்கப்பூர் 27 ஆவது இடத்திலும் உள்ளன. ஆப்கானித்தான் மதிப்பிடப்பட்ட 169 நாடுகளுள் 155 ஆவது இடத்தைப் பெற்று, ஆசிய நாடுகளுள் மிகக் கீழான நிலையில் உள்ளது.[9]

Remove ads
பிற நாடுகளின் கூற்று
ஆங்லோபோன் ஆப்பிரிக்கா மற்றும் கரிபியன்
ஆங்லோபோன் ஆப்பிரிக்கா குறிப்பாக கிழக்கு ஆபிரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் ஆகியவற்றில் "ஆசிய" என்ற வார்த்தை பொதுவாக தெற்காசிய வம்சாவளியினர் குறிப்பாக இந்தியர்கள், பாக்கிஸ்தான், பங்களாதேசிகள் மற்றும் ஸ்ரீலங்காவாசிகளுடன் தொடர்புடையது என கூறுகின்றனர். தென்னாப்பிரிக்காவில் ஆசிய வார்த்தை முழு கண்டம் உணர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. தென்னாபிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் இருப்பதால் உத்தியோகபூர்வ ஆவணங்கள் "இந்திய" என்ற பெயரை தெற்கு மற்றும் கிழக்கு-ஆசியர்கள் என கருத்துகின்றனர்.[10]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads