பிறவிச்சுழற்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிறவிச்சுழற்சி அல்லது சம்சாரம் (Sanskrit: संसार; Tibetan: khor wa; Mongolian: orchilong) இது இந்து, பெளத்த, சமண, சீக்கிய சமயங்களின் கருத்துரு. இந்த கருத்துருவின்படி ஒரு உயிருக்கு செய்த பாவ-புண்ணியங்களின் அடிப்படையில் பிறப்புகள் உண்டு. ஒரு சீவாத்மாவின் வினைப் பயன் படி உயர்ந்த அல்லது தாழ்ந்த பிறவிகள் அமைகிறது.[1][2]
பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைய
இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து மோட்சம் எனும் விடுதலை அடைய, வேதாந்த சாத்திரங்களில் வழிகள் உரைத்துள்ளது. பிறவிச் சுழற்சியிலிருந்து தப்ப கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் போன்ற வழிகளை பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணர் அருளியுள்ளார் [3].
ஒரு உயிரினம் இறக்கும் பொழுது அதன் கர்ம வினைப்பயன்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமைகிறது. ஒருவர் நல்ல செயல்களைச் செய்தால், அவர் உயர் உயிரினமாகப் பிறப்பார். கேடு செய்தால் கீழ் உயிரினமாகப் பிறப்பார். பிறவிச்சுழற்சி ஒரு கொடுமையாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு சீவனின் இறுதி நோக்கம் இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு விடுதலைப் அடைந்து, மெய்பொருளோடு சேர்வது அல்லது மோட்சம் அடைவது ஆகும்.[4]
இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும். மேலும் ஒரு எளிமையான உயிரினம் (எ.கா பக்டீரியா, மிளகாய்) அறக் கோட்பாடுகளை விளங்கி அதற்கு ஒழுங்கு எப்படி வாழும் என்றும் விளக்கப்படவில்லை.
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads