ஜீவாத்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜீவாத்மா அல்லது ஜீவன் (Sanskrit: जीव, jīva, alternate spelling jiwa; Hindi: जीव, jīv, alternate spelling jeev): சத்துவ குணம் குறைந்த மாயையில், பிரம்மத்தின் பிரதிபலிப்பதால் ஜீவாத்மா தோன்றுகிறான். இதற்கு அடிப்படையான அவித்தையான அந்தக்கரணம் சத்வகுணத்தின் குறைவால் ஞானமும், சக்தியும் சிறிதாக இருப்பவனாக ஜீவன் தோன்றுகிறான்[1]. இதனாலேயே கட்டுப்படாத பிரம்மம், கட்டுப்பட்ட ஜீவனாகத் தோன்றுகிறான்.
ஜீவாத்மாவின் குணங்கள்
அந்தகரணங்களின் மாறுபாடுகளே மாயையின் பரிமாண மாறுதல்கள்தான் ஜீவாத்மா. அவை இச்சை, முயற்சி, வெறுப்பு, சுகம்-துக்கம் முதலியவைகள். இவை தோன்றுவதால் ஜீவன், நான் அனுபவிப்பவன் , நான் செய்பவன், பாக்கியவான் , துர்ப்பாக்கியவான் என்றெல்லாம் சொல்லும்படி மாற்றங்கள் நிகழுகின்றன.
நீரில் தோன்றும் நிலவு, நீர் அசைகையில் அசைவது போலத் தோன்றும். பார்ப்பவரும் நிலா அசைகிறது என்று சொல்லக்கூடும். அதே போல, மனதில் உண்டாகும் பிரதிபிம்பம் சலனப்படுவதாகவு, மாறுவதாகவும் சொல்லும்படி இருக்கிறது. இதனாலேயே சீவன் உலகில் சஞ்சாரம் செய்வதாகவும் சொல்கின்றனர். சீவாத்மா தான் செய்த புண்ணிய-பாவங்களுக்கு ஏற்ப, உலகிலிருந்து இறப்பதாகவும், பிறப்பதாகவும், சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அலைவதாகவும், தேவயானம், பித்ருயானம் என்ற ஒளி மிகுந்த வழியிலும், இருளடைந்த வழியிலும் போவதாகவும், வருவதாகவும் சொல்கிறார்கள்.
Remove ads
ஜீவாத்மாவின் இலக்குகள்
ஜீவன் இந்த உலகத்திலும், மற்றைய உலகங்களிலும் திரியும் செயல்கள் நடக்கின்றன. சீவனுக்கு அறிவும், திறமையும் குறைவாகக் காணப்படுகிறது. அதனால் விருப்பு, வெறுப்புக்கள் ஏற்படும்பொழுது விரும்பியதை அடையமுடியாமலும், வெறுப்பதை ஒதுக்க முடியாமலும் துக்கப்படுகிறான். அப்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இறைவனை துதிக்கிறான்.
இறைவனின் கருணையால் தொழில், செல்வம், புகழ், மனைவி, மக்கள் இன்னபிற உலக வாழ்க்கை நலன்களையும் அடைந்து சுகமாக வாழ்கிறான். மற்றும் இம்மைப் பயனுடன் மறுமை நலமான சொர்க்க வாழ்வையும் கூட அடைகிறான்.
Remove ads
ஜீவாத்மாவின் முடிவான இலக்கு
ஆத்ம ஞானம் அடைந்த ஜீவன் எந்த பயனையும் எதிர்பாராமல் ஆசையற்றவனாய் இறைவனை தியானிப்பதன் மூலம் அவருடைய கருணைக் கொடையால் மனத்தூய்மைப் பெற்று குருவிடம் வேத வேதாந்தக் கல்வி கேள்விகளுக்கு தகுதியுடையவனாகி, ஆத்ம ஞானம் பெற்று சீவமுக்தி நிலை அடைந்து, இறப்பிற்குப்பின், பிறவியில்லாப் பெருவாழ்வு எனும் விதேக முக்தி அடைதலே ஜீவாத்மாவின் முடிவான இலக்காகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads