சம்பாவத்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

சம்பாவத்map
Remove ads

சம்பாவத் (Champawat) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் சம்பாவத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். ஒரு நகராட்சியான இது சம்பாவத் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாகவும் திகழ்கிறது. இந்த நகரம் குமாவுன் இராச்சியத்தின் முன்னாள் தலைநகராக இருந்தது.

விரைவான உண்மைகள் சம்பாவத் காளி குமாவுன், நாடு ...
Remove ads

புராணம் மற்றும் மதம்

சம்பாவத் பகுதியில் விஷ்ணுவின்]] அவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரம் (ஆமை அவதாரம்) நடந்ததாக நம்பப்படுகிறது. தற்போது இங்கு சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கிரந்தேசுவர் கோயில் ஒன்று உள்ளது. மகாபாரதப் போரில் இறந்தபின் கடோற்கஜனின் (வீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்தவன்) தலை இங்கு விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. கஹ்த்கு மந்திர் என்ற கோயில் கடோற்கஜனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மௌராரி என்ற கிராமத்தில் ஷானி மந்திர் (அல்லது மனோகம்னா புராண மந்திர் கௌலா) என்ற புகழ்பெற்ற கோயிலும் உள்ளது.

Remove ads

வரலாறு

சம்பாவத்தின் அசல் பெயர் சம்பாவதி என்று கூறப்படுகிறது. இது சம்பாவதி ஆற்றங்கரையில் அமைந்திருப்பதால் இப்பெயரைப் பெற்றது. இந்த பிராந்தியத்தின் மேற்கில் தோன்கோட் என்ற கோட்டை இருந்தது. அங்கு உள்ளூர் ரவுத் மன்னர்கள் வசித்து வந்தனர். சம்பாவதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஏழு பழங்காலக் கோயில்கள் உள்ளன: பாலேசுவர், கிரந்தேசுவர், தட்கேசுவர், ரிசினேசுவர்,திக்தேசுவர், மல்லரேசுவர் மற்றுசுவர் கோயில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. குருபாதுகா என்ற உள்ளூர் காவியத்தின் படி, நாகர்களின் சகோதரியான சம்பாவதி, சம்பாவத்தின் பாலேசுவர் கோவிலுக்கு அருகில் தவம் செய்தார். அவரது நினைவாக, சம்பாவதி கோயில் இன்னும் பாலேசுவர் கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ளது. வாயு புராணத்தின் படி, பூரி நாக வம்சத்தின் ஒன்பது மன்னர்களின் தலைநகராக சம்பாவதி இருந்தது.[1]

Thumb
கோட்டை மற்றும் தலைநகரான காளி குமாவுன், சம்பாவத், 1815.

சம்பாவத் முன்பு குமாவுனின் சந்த் வம்ச ஆட்சியாளர்களின் தலைநகராக இருந்தது. 12 ஆம் நூற்றாண்டில் சந்த் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட பாலேசுவர் கோயில் அற்புதமான கற்களால் செதுக்க்கப்பட்ட படைப்புகளைக் கொண்ட ஒரு சிறந்த நினைவுச்சின்னமாகும்.

Remove ads

சம்பாவத் புலி

நானூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற ஒரு ஆட்தின்னி புலிக்கு "சம்பாவத் புலி" எனப் பெயரிடப்பட்டது. 1907 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் என்பவரால் சுடப்பட்டது. இவர் முதன்முதலில் வேட்டையாடிய சம்பாவத் புலி மட்டும் 436 ஆவணப்படுத்தப்பட்ட மரணங்களுக்குக் காரணமாக இருந்தது.

நிலவியல்

சம்பாவத் வட இந்திய மாநிலமான உத்தராகண்டம் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது குமாவோன் இமயமலையின் கிழக்கு பகுதியில் 1,615 மீட்டர் (5,299 அடி) உயரத்தில் உள்ளது .[2] இது 29.33 ° வடக்கிலும் 80.10 ° கிழக்கிலும் அமைந்துள்ளது .[3] நகரம் உத்தராகண்டம் மாநிலத்தின் சம்பாவத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிதௌரகட் மாவட்டத்திலிருந்து உத்தரபிரதேச அரசால் 1997இல் பிரிக்கப்பட்டது.[4]

காலநிலை

சம்பாவத் ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலையை ( கோப்பன் காலநிலை வகைப்பாடு) தனித்துவமான ஈரமான மற்றும் வறண்ட பருவங்களைக் கொண்டுள்ளது.[5] அதன் உயர்ந்த உயரத்தின் காரணமாக, சம்பாவத் வழக்கமாக ஆண்டு முழுவதும் மிகவும் மிதமான காலநிலையை கொண்டுள்ளது. சம்பாவத்தில் ஆண்டின் சராசரி வெப்பநிலை 24.6 °C (76.3 °F) . வெப்பமான மாதம், சராசரியாக, சூன் மாதத்தின் சராசரி வெப்பநிலை 32.1 °C (89.8 °F) . சராசரியாக குளிரான மாதம் சனவரி, சராசரி வெப்பநிலை 14.3 °C (57.7 °F) . சம்பாவத்தில் ஆண்டிற்கான சராசரி மழைவீழ்ச்சி 1,239.5 மில்லிமீட்டர்கள் (48.80 அங்) . சராசரியாக அதிக மழை பெய்யும் மாதம் சூலை 358.1 மில்லிமீட்டர்கள் (14.10 அங்) மழைப்பொழிவு. சராசரியாக குறைந்தபட்ச மழைப்பொழிவு கொண்ட மாதம் நவம்பர் 2.5 மில்லிமீட்டர்கள் (0.098 அங்) . சராசரியாக 43.8 நாட்கள் மழைப்பொழிவு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அதிக மழைப்பொழிவு 10.9 நாட்களாகவும், குறைந்தபட்ச மழைப்பொழிவு நவம்பர் மாதத்தில் 0.6 நாட்களாகவும் இருக்கிறது.

Remove ads

புள்ளிவிவரங்கள்

சம்பாவத் 2011இல் 4801 என்ற அளவில் அதன் மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. இது 2001இல் 3958 ஆக இருந்ததில் இருந்து 21.3% அதிகரித்துள்ளது.[6] மொத்த மக்கள்தொகையில், 2,543 ஆண்களும், 2,258 பெண்களும் இருந்தனர்.[7]

0–6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 554 ஆகும். இது சம்பாவத்தின் மொத்த மக்கள் தொகையில் 11.54% ஆகும்.[7][8] இங்கு, பெண் பாலியல் விகிதம் மாநில சராசரி 963 க்கு எதிராக 888 ஆகும். மேலும், இங்கு குழந்தை பாலியல் விகிதம் 748 ஆகும். நகரத்தின் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியான 78.82% ஐ விட 91.69% அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 95.91% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 87.04% ஆகவும் உள்ளது.

நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் அட்டவணை சாதி 18.60% ஆகவும், அட்டவணை பழங்குடியினர் 0.94% ஆகவும் உள்ளனர்.[7] மொத்த மக்கள்தொகையில், 1,356 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.[8] இதில் 1,103 ஆண்களும், 253 பெண்களாகவும் இருக்கின்றனர். மொத்தம் 1356 உழைக்கும் மக்களில், 95.28% பேர் பிரதான பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்த தொழிலாளர்களில் 4.72% பேர் சிறிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads