சம்பாவத் மாவட்டம்

உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சம்பாவத் மாவட்டம்
Remove ads

சம்பாவத் மாவட்டம் (Champawat district), இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் கிழக்கு குமாவன் மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சம்பாவத் நகரம் விளங்குகிறது.

விரைவான உண்மைகள் சம்பாவத் மாவட்டம் चम्पावत जिला, நாடு ...
Remove ads

மாவட்ட நிர்வாகம்

சம்பாவத் மாவட்டம், பாரகோட், சம்பாவத், லொகாகாட், பட்டி என்ற பூர்ணகிரி நான்கு வட்டங்களை உடையது.

மாவட்ட எல்லைகள்

இம்மாவட்ட்டதின் வடக்கில் பிதௌரகட் மாவட்டம், கிழக்கில் நேபாளம், தெற்கில் உதம்சிங் நகர் மாவட்டம், மேற்கில் நைனித்தால் மாவட்டம் மற்றும் வடமேற்கில் அல்மோரா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

அரசியல்

சம்பாவத் மாவட்டம், லோககாட் மற்றும் சம்பாவத் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உடையது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,766 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 259,648 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 131,125 மற்றும் பெண்கள் 128,523 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 980 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 147 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 79.83 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.61 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 68.05 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 37,028 ஆக உள்ளது.[1]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தினர் 249,563 (96.12 % ) ஆகவும், இசுலாமிய சமயத்தினர் 8,693 (3.35 %) ஆகவும், மற்ற சமயத்தினர் கனிசமாக உள்ளனர்.

உத்தராகண்ட மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்திற்கு அடுத்து மக்கள்தொகையில் குறைந்த மாவட்டங்களில் சம்பாவத் மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. [2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads