மலாய் தீவுக்கூட்டம்

From Wikipedia, the free encyclopedia

மலாய் தீவுக்கூட்டம்
Remove ads

மலாய் தீவுக்கூட்டம் (ஆங்கிலம்: Malay Archipelago, மலாய்: Kepulauan Melayu; Nusantara; இந்தோனேசியம்: Kepulauan Melayu) என்பது பெருநிலத் தென்கிழக்காசியாவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையேயான தீவுக்கூட்டம் ஆகும். இது மலாய் உலகம், இந்தோ-ஆத்திரேலியத் தீவுக்கூட்டம், கிழக்கிந்தியத் தீவுகள் எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது.

விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...

19ஆவது நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் மலாய் இனத்தினரைக் குறித்து கொண்டிருந்த கருத்தியல்படி இப்பெயர் இடப்பட்டுள்ளது.[2] இந்திய, அமைதிப் பெருங்கடல்களுக்கிடையே அமைந்துள்ள 25,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இத்தீவுக்குழுமம் இப்பகுதியின் மிகப்பெரும் தீவுக்கூட்டமாகவிளங்குகின்றது; உலகின் மிகுந்த தீவுகளை உடைய தீவுக்கூட்டங்களில் தீவுகளின் எண்ணிக்கையின்படி நான்காவதாக உள்ளது.

புரூணை, கிழக்கு மலேசியா, கிழக்குத் திமோர், இந்தோனேசியா, சிங்கப்பூர், மற்றும் பிலிப்பீன்சு நாட்டுத் தீவுகளை உள்ளடக்கியுள்ளது.[4] பொதுவாக மலாய் தீவுக்கூட்ட வரையறுப்புகளில் நியூ கினி விலக்கப்பட்டாலும் இந்தோனேசியாவைச் சேர்ந்த, தீவின் மேற்குப் பகுதி சேர்க்கப்படுகின்றது.[4] இந்த வரையறுப்பு பெரிதும் கடல்சார் தென்கிழக்காசியாவுடன் இயைந்துள்ளது.[5]

Remove ads

சொற்தோற்றமும் கலைச்சொற்களும்

இந்தப் பெயர் மலாய் இனத்தவர் குறித்த ஐரோப்பியக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது.[2] ஐரோப்பியர்கள் தற்கால புரூணை, கிழக்குத் திமோர், (மேற்கு நியூ கினியா தவிர்த்த) இந்தோனேசியா , மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்சு நாட்டு மக்களை மலாய் இனத்தவர் எனக் குறிப்பிட்டனர். சுமாத்திராவில் நிலைபெற்றிருந்த மலாய் இனப் பேரரசான சிறீவிஜயத்தின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகாண் பயணிகள் இத்தகைய இனஞ்சார்ந்த கருத்தியலை முன்வைத்திருந்தனர்.[6]

19ஆவது-நூற்றாண்டு இயற்கை அறிவியலாளர் ஆல்ஃவிரடு வாலேசு இப்பகுதி குறித்த தனது தாக்கம் மிகுந்த ஆய்வு நூலிற்கு "மலாய் தீவுக்கூட்டம்" என்ற தலைப்பிட்டார். வாலேசு இப்பகுதியை "இந்தியத் தீவுக்கூட்டம்" என்றும் "இந்தோ-ஆத்திரேலிய" தீவுக்கூட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[7] அவற்றின் இயல்வரைவை ஒட்டி சொலமன் தீவுகளையும் மலாய் தீபகற்பத்தையும் இந்தப் பகுதியில் சேர்த்திருந்தார்.[7] வாலேசின் குறிப்பின்படி,[8] பப்புவா நியூ கினியை விலக்குவதற்கு பண்பாட்டு, புவியியல் காரணங்கள் இருப்பதாகக் கூறினார்: இப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள பிற நாடுகளின் பண்பாட்டை விட பப்புவா நியூகினியின் பண்பாடு மாறானது. சுந்தா கண்டத் திட்டு தீவுகள் போலன்றி நியூ கினி புவியியல்படி ஆசியக் கண்டத்தில் இல்லை; (பார்க்க ஆத்திரேலியா).

16ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஐரோப்பிய குடியேற்றக் காலத்தில் இத்தீவுக்கூட்டம் "கிழக்கிந்தியா"[9] எனப்பட்டது. இப்போதும் சிலநேரங்களில் அவ்வாறே குறிப்பிடப்பட்டாலும்,[4] "கிழக்கிந்தியா" என்பதன் விரிவான பயன்பாடாக இந்தோசீனாவும் இந்தியத் துணைக்கண்டமும் சேர்க்கப்படுகின்றன. இந்தப் பகுதி இந்தோனேசிய மொழியில் "நுசான்தரா" எனப்படுகின்றது.[10] தவிரவும் இப்பகுதி "இந்தோனேசியத் தீவுக்கூட்டம்" என்றும் குறிப்பிடப்படுகின்றது.[11][12] "கடல்சார் தென்கிழக்காசியா" என்ற சொல் இதே பொருளுடையது; தென்கிழக்காசியாவின் தீவுகளையும் மலாய் தீபகற்பத்தில் காணப்படும் தீவினர் போன்ற சமூகங்களையும் உள்ளடக்கியது.[13]

Remove ads

புவியியல்

இத்தீவுக்கூட்டத்தின் கடல் பகுதியும் நிலப்பகுதியும் சேர்ந்த பரப்பளவு 2 மில்லியன் கிமீ2க்கும் கூடுதலானது.[1] The more than 25,000க்கும் கூடுதலான இத்தீவுக்கூட்டத்தில் பல சிறு தீவுத்தொகுதிகளும் அடங்கியுள்ளன.[14][15][16]

பெரும் குழுமங்களாக உள்ளவை:

நியூ கினி, போர்னியோ, சுமாத்திரா, சுலாவெசி, சாவகம், லூசோன் ஆகியன ஆறு மிகப் பெரும் தீவுகளாகும்.

புவியியலில் உலகின் மிகவும் துடிப்பான எரிமலை வலயங்கள் இங்குள்ளன. புவித்தட்டு மேல்நோக்கி நகர்தலால் மலேசியாவின் சபாவிலுள்ள 4,095.2 மூ உயரமுள்ள சிகரமான கினபாலு மலை, இந்தோனேசிய பப்புவாவிலுள்ள 4,884 m (16,024 அடி) உயரமுள்ள புன்காக் ஜெயா போன்ற பெரிய மலைகள் உருவாகியுள்ளன. இத்தீவுக்கூட்டத்தில் உள்ள மற்ற உயர்ந்த மலைகள் இந்தோனேசியாவின் 4,760 m (15,617 அடி) உயரமுள்ள புன்காக் மண்டாலாவும் 4,750 m (15,584 அடி) உயரமுள்ள புன்காக் டிரைக்கோராவும் ஆகும்.

நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால் இத்தீவுக்கூட்டம் முழுவதிலும் வெப்பமண்டல வானிலை நிலவுகின்றது.

Remove ads

இதனையும் காண்க

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads