மலாய-பொலினீசிய மொழிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலாய்-பொலினீசிய மொழிகள் என்பன ஆஸ்திரோனீசிய மொழிகளின் ஒரு துணைக் குழுவாகும். ஏறத்தாழ 351 மில்லியன் மக்கள், மலாய்-பொலினீசிய மொழிகளில் ஒன்றைப் பேசிவருகிறார்கள். இந்த மொழிகள் தென்கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் தீவு நாடுகளிலும், ஆசியாவில் சிறிய அளவில் சில இடங்களிலும் பேசப்படுகின்றன.[1]

விரைவான உண்மைகள் மலாய்-பொலினீசிய மொழிகள் Malayo-Polynesian Bahasa-bahasa Melayu-Polinesia ...

மலாய்-பொலினீசிய மொழிகள் குழுவைச் சேர்ந்த மலகாசி மொழி, இம் மொழிகள் பொதுவாகக் காணப்படும் புவியியல் பகுதிக்கு வெளியே, இந்துப் பெருங் கடலில் உள்ள மடகாஸ்கர் தீவிலும் பேசப்படுகிறது.

Remove ads

பொது

பன்மையைக் குறிப்பதற்கு ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ இரு தடவை பயன்படுத்துதல் மலாய் போலினீசிய மொழிகளிடையே காணப்படும் ஒரு இயல்பாகும். அத்துடன் ஏனைய ஆஸ்திரோனீசிய மொழிகளைப் போல இம் மொழிகளும் எளிமையான ஒலியனமைப்பைக் (phonology) கொண்டவை.

இதனால் இம்மொழியின் உரைகள் குறைவான; ஆனால் அடிக்கடி வரும் ஒலிகளைக் கொண்டவை. இம் மொழிக் குழுவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் கூட்டுமெய்கள் (consonant clusters) இருப்பதில்லை. இம் மொழிகளுட் பல உயிரொலிகளையும் குறைவாகவே கொண்டுள்ளன. ஐந்து உயிர்களே பொதுவாகக் காணப்படுவதாகும்.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads