சம்யுக்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்யுக்தா (Samyukta), கன்னோசி நாட்டின் மன்னன் செயச்சந்திரனின் மகள். தில்லி மற்றும் அஜ்மீர் ஆகிவைகளைத் தலைநகரங்களாகக் கொண்ட பிரித்திவிராஜின் காதல் மனைவியாவார். மத்தியகால இந்தியாவில் ராணி சம்யுக்தா - பிரிதிவிராஜின் காதல் கதைகள் மிகப் பிரபலம்.[1]
Remove ads
சம்யுக்தாவின் திருமணம்
கன்னோசி மன்னன் செயசந்திரனும், தில்லி பேரரசர் பிரிதிவிராஜ் சௌகானும் இராஜபுத்திர குலத்தவர்கள். அரசர் பிரிதிவி மற்றும் சம்யுக்தா இருவரும் காதல் கொண்டனர். ஆனால் கன்னோசி மன்னர் செயசந்திரன் இருவரின் காதலை ஏற்றுத் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். அத்துடன் நில்லாது சம்யுக்தாவிற்கு திருமண சுயம்வரம் உறுதி செய்தார். சுயம்வரத்திற்குப் பிரிதிவிராஜ் சௌகானைத் தவிர மற்ற இளவரசர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனைக் கேள்விப்பட்ட பிரிதிவிராஜ் சௌகான் மிக்க கோபம் கொண்டு, கன்னோசியிலிருந்து சம்யுக்தாவைக் கடத்திச் சென்று, கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டார்.
Remove ads
சம்யுக்தாவின் மரணம்
கோரி முகமது தில்லியின் மீது முதலில் படையெடுப்பு செய்தபோது பிரிதிவிராஜன் வென்றார். ஆனால் அவனைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார்.அடுத்தமுறை கோரி முகமது படையேடுப்பின் போது பிரிதிவிக்கு எதிராகக் கோரியின் படையில் இம்முறை பிரிதிவியின் மனைவி ராணி சம்யுக்தாவின் தந்தையின் படையும் சேர்ந்து போரிட்டதால் வீரமரணம் அடைந்தார் மாமன்னர் பிரிதிவி அவரது மரணம் தெரிந்ததும் ராணி சம்யுக்தா தற்கொலை செய்து கொண்டார்.
ராணி சம்யுக்தா திரைப்படம்
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் நடித்த[2] ராணி சம்யுக்தா என்ற திரைப்படம் 1962-இல் வெளிவந்தது. சம்யுக்தா - பிரிதிவிராஜ் காதல் கதை குறித்துத் தொலைக்காட்சி (ஸ்டார் பிளஸ்) தொடர்கள் வெளிவந்தது. மேலும் ராணி சம்யுக்தா என்ற பெயரில் பல வரலாற்றுப் புதினங்கள் வெளியாயின.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads