சம்வர்ணன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்வர்ணன் (சமசுகிருதம்: संवरण), மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவர். மன்னர் ரிக்ஷாவின் மகனான இவர் குரு நாட்டின் மன்னர். இவரது மனைவி சூரிய புத்திரி தபதி ஆவார்.[1]இவரது மகன் மன்னர் குரு ஆவார்.[2]
மகாபாரத காவியத்தின் ஆதி பருவத்தில் மன்னர் சம்வர்ணனின் வரலாறு கூறப்படுகிறது. இவனது ஆட்சியில் ஒருமுறை குரு இராச்சியாத்தில் பஞ்சம், வறட்சி, நோய்களால் மக்கள் பெரும் துயரில் இருந்த போது, எதிரிகள் இவனது நாட்டை தாக்கினர். மன்னர் சம்வர்ணன் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அமைச்சர்களுடன் சிந்து நதியின் காடுகளில் குடியேறி, முனிவர் வசிட்டருடன் எட்டு ஆண்டுகள் தங்கினார். அதன்பிறகு, சம்வரணன் வசிட்டரை தனது புரோகிதராகக் கொண்டு மீண்டும் இழந்த இராச்சியத்தை மீட்டெடுத்தார்.[3]
பின்னர் இவர் வசிட்டரின் ஆலோசனையின் பேரில், காசியப முனிவருக்கும், அதிதிதேவிக்கும் பிறந்த, சூரியக் கடவுளான விவஸ்வானின் மகளான தபதியை மணந்தார். பன்னிரெண்டு ஆண்டுகள் மன்னர் சம்வர்ணன் தனது கடமைகளிலிருந்து முற்றிலும் விலகி, மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும் தனது மனைவி தபதியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். மீண்டும் வறட்சி நாட்டைத் தாக்கியது. அதன் பிறகு வசிஷ்டர், சம்வர்ணனையும், அவரது மனைவியையும் மீண்டும் நாட்டிற்கு திரும்ப அழைத்தார். சம்வர்ணனும், தபதியும் நாட்டிற்கு திரும்பியதும் அனைத்து குடிமக்களுக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வந்தது.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads