சம இரவு நாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும்.

சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.
நிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைக் கோள்கள், இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தைச் சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களைப் பயன்படுத்தும்;பயனர் தகவல்களைச் சுமக்காது.
புவியின் வடக்குப் பகுதியில் இவை இளவேனில் மற்றும் இளங்கூதிர் காலங்கள் துவங்கும் நாட்களாக அறியப்படுகின்றன.
பொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால்,பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
குறிப்பு: குளிர் காரணங்களால் மரத்தின் இலைகள் உதிர்ந்து பின் மீண்டும் முளைக்கும்
Remove ads
பேரரசர் கனிஷ்கர் காலத்தில்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads