கதிர்த்திருப்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதிர்த்திருப்பம் (Solstice) என்பது கதிரவன் தன் கதிர்வீதியில் திசை மாறும் நிகழ்வை/நாளைக் குறிக்கும். இந்நாளில் கதிரவனின் கதிர்கள் புவியினை மிகுந்த சாய்வுடன் சந்திக்கின்றன. கதிரவன் திசை திரும்பும் முன் தனது நகர்தலை நிறுத்துவதுபோல உள்ளதால் இலத்தீனில் இந்நாளை சோல்சுடைசு (சோல் - கதிரவன்,சிசுடைர் - நிற்றல்) என குறிக்கின்றனர்.
சூன் கதிர்த்திருப்பம் அன்று புவியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் புவியின் தெற்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் இதனை வேனில் கால கதிர்த்திருப்பம் எனப்படுகிறது. அன்று பகல்பொழுது மிக கூடுதலாக இருக்கும். சூன் 21 அன்று இது நிகழ்கிறது.
திசம்பர் கதிர்த்திருப்பம் அன்று புவியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் புவியின் தெற்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் இருக்கும். வடக்கு அரைக்கோளத்தில் இதனை குளிர்கால கதிர்த்திருப்பம் எனப்படுகிறது. அன்றைய தினம் பகற்பொழுது மிகக் குறைவாக இருக்கும். திசம்பர் 21 அன்று இது நிகழ்கிறது.
உலகின் பல பாகங்களிலும் இந்நாட்கள் விழாக்களாகவும் விடுமுறை நாட்களாகவும் கொண்டாடப்படுகின்றன. கிருத்துவ சமயத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் குளிர்கால கதிர்த்திருப்பத்திற்கு மூன்று நாட்களில் உள்ளதைக் காண்க. இந்து தொன்மவியலில் தை மாதம் துவங்கும் நாளாக இது கருதப்படுகிறது; தட்சிணாயன சங்கிராந்தி, பொங்கல் விழா என கொண்டாடப்படுகிறது. வேனிற்கால கதிர்த்திருப்பம் ஆடி மாதம் துவங்கும் நாளாக கருதப்படுகிறது; உத்தராயண சங்கிராந்தி எனக் கொண்டாடப்படுகிறது.
Remove ads
படக்காட்சியகம்
- வடக்கு கதிர்த்திருப்பத்தின்போது புவி மீது சூரியக்கதிர்கள்.
- தெற்கு கதிர்த்திருப்பத்தின்போது புவி மீது சூரியக்கதிர்கள்.
- புவியின் காலங்கள் - வடக்கின் பார்வையில். வலதுகோடியில்: தெற்கு கதிர்த்திருப்பம்
- புவியின் காலங்கள் - தெற்கின் பார்வையில். இடதுகோடியில்: வடக்கு கதிர்த்திருப்பம்
குறிப்பு
பிற பக்கங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads