சரதோக் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சரதோக் மாவட்டம்map
Remove ads

சரதோக் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Saratok; ஆங்கிலம்: Saratok District; சீனம்: 砂拉卓县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பெத்தோங் பிரிவில் ஒரு மாவட்டமாகும். சரதோக் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1,586.9 சதுர கிலோமீட்டர்.[1]

விரைவான உண்மைகள் சரதோக் மாவட்டம் Saratok DistrictDaerah Saratok, நாடு ...
Thumb
சரதோக் மாவட்டத்தின் வரைப்படம்

இந்த மாவட்டம் அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு (Longhouses) பிரபலமானது. இங்குள்ள இபான் மக்கள், சரவாக் மாநிலத்தின் பூர்வீகப் பழங்குடியினர். இவர்களை கடல் தயாக்குகள் (Sea Dayaks) என்று அழைப்பதும் உண்டு.[2][3]

Remove ads

பெத்தோங் பிரிவு மாவட்டங்கள்

பெத்தோங் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

அதன் அதிகார வரம்பிற்கு கீழ் மூன்று துணை மாவட்டங்கள் உள்ளன:[4]

  • ரோபன் துணை மாவட்டம் (Roban Sub-district),
  • கபோங் துணை மாவட்டம் (Kabong Sub-district)
  • புடு துணை மாவட்டம் (Budu Sub-district).

பொது

சரதோக் மாவட்டத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் இபான் மக்கள். இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் நீளவீடுகளில் வாழ்கின்றனர். நெல், மிளகு மற்றும் ரப்பர் மரம் சீவுதல் இவர்களின் பொதுவான தொழில் வாழ்க்கை.

இபான்களில் சிலர் செம்பனைத் தோட்டங்களில் (Palm Oil Plantations) வேலை செய்கிறார்கள்; அல்லது சொந்தமாக வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பொதுவாக, இந்த மாவட்டத்தில் உள்ள மலாய்ச் சமூகத்தினர் ஆறுகளுக்கு அருகில் தங்கி, மீன்பிடித்தல் மற்றும் அன்னாசி, கொக்கோ மற்றும் தென்னை நடவு செய்து வாழ்கின்றனர். சரதோக் நகரத்தில் உள்ள பெரும்பாலான கடைக்காரர்கள் சீனர்கள் ஆகும்.[5]

Remove ads

இனக்குழுக்கள்

சரதோக் மாவட்டம் பாரம்பரியமாக இபான், மலாய் மக்கள் மற்றும் சீனர் மக்களின் தாயகமாக உள்ளது. பெரும்பாலான இபான் மக்கள் பெத்தோங் மாவட்டம் மற்றும் சரதோக் மாவட்டத்தின் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர்.

சீன மக்கள் பெத்தோங் மற்றும் சரதோக் போன்ற நகரப் பகுதிகளில் அதிக அளவில் உள்ளனர். பிற இனங்களான பிடாயூ, மெலனாவ் மற்றும் ஒராங் உலு ஆகியோர் பெத்தோங் பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல.

இருப்பினும், சரவாக் முழுவதும் இருந்தும், அண்மைய காலங்களில் அதிகமானோர் பெத்தோங்; சரத்தோக் மாவட்டங்களுக்குள் குடியேறி வருகிறார்கள். வெளிநாட்டு தொழிலாளர்கள் அரிதாகவே காணப் படுகின்றனர். அவர்களில் பலர் செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்கின்றனர்.

சான்றுகள்

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads