சரவணன் இருக்க பயமேன்

எழில் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சரவணன் இருக்க பயமேன் (Saravanan Irukka Bayamaen) என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.

விரைவான உண்மைகள் சரவணன் இருக்க பயமேன், இயக்கம் ...

இதனை எழுதி இயக்கியவர் எழில் (இயக்குநர்) ஆவார். உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கியக் கதாப்ப்பத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சிருஷ்டி டங்கே, சூரி, லிவிங்ஸ்டன் (நடிகர்), யோகி பாபு , மன்சூர் அலி கான் ஆகியோர் துணைக் கதாப்பத்திரங்களில்நடித்துள்ளனர். மேலும் ரோபோ சங்கர், ரவி மரியா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தத் திரைப்படம் மே 12, 2017 இல் வெளியானது.[1]

Remove ads

கதைச் சுருக்கம்

சரவணன் (உதயநிதி ஸ்டாலின்) வாழ்க்கையில் எந்தக் குறிக்கோள்களும் இல்லாமல் இருக்கும் இளைஞர்.[2] கல்யாணம்(சூரி உள்ளூர் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். அவருக்கு கோழித்துண்டு கிடைக்காத காரணத்தினால் அவர் அந்தக் கட்சியிலிருந்து விலகுகிறார். அவரை தேசிய அரசியலில் தான் ஈடுபட வைப்பதாக சரவணன் கூறுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக நடக்கும் ஒளிப்பட மாறுதலால் சரவணன் தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவராகவும், கல்யாணம் வெளிநாடு செல்லவும் நேரிடுகிறது. அவர் வெளிநாட்டில் ஒட்டகத்தினைப் பராமரிக்கும் வேலையை செய்து வருகிறார். இவரின் வீட்டையே சரவணன் தனது கட்சி அலுவலமாகப் பயன்படுத்தி வருகிறார்.

அந்த சமயத்தில் தேன்மொழி (ரெஜினா கசாண்ட்ரா) தனது உறவினரான சரவணின் வீட்டிற்கு குடும்பத்துடன் வருகிறார். இவரைப் பார்த்ததுமே சரவணன் இவர்மேல் காதல் கொள்கிறார். ஆனால் தேன்மொழி இதனை மறுக்கிறார். சரவணனுடைய காதலுக்கு அவரின் தோழியான பாத்திமாவின் ஆன்மா உதவிபுரிகிறது. பாத்திமா ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். இறப்பதற்கு முன் சரவணன் மீது இவருக்கு ஈர்ப்பு இருந்தது.

இந்த சமயத்தில் வீரசிங்கத்தின் (மன்சூர் அலி கான்) மகனான ராஜதுரைக்கும் தேன்மொழிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்தத் திருமணத்தை நிறுத்தி எவ்வாறு சரவணனும் தேன்மொழியும் சேர்ந்தார்கள் என்பதை நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைத்திருப்பார்கள்

Remove ads

தயாரிப்பு

சூலை,2016 இல் உதயநிதி ஸ்டாலின் தான் இயக்குநர் எழிலின் இயக்கத்தில் நகைச்சுவையை மையமாகக் கொண்ட திரைப்படத்தை தயாரித்து நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார். எழில் இதற்கு முன் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் எனும் திரைப்படத்தை இயக்கினார்[3]. ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சிருஷ்டி டங்கே ஆகியோர் முக்கிய பெண் கதாப்பத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[4] நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் நடிக்க சூரி ஒப்பந்தம் ஆனார்.[5] அதிகாரப்பூர்வமாக இந்தத் திரைப்படத்தின் தலைப்பானது அதன் சுவரிதழோடு செப்டம்பர், 2016 இல் வெளியானது.[6]

Remove ads

வெளியீடு

இந்தத் திரைப்படம் மே 12, 2017 இல் வெளியானது.[7] இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றது.

ஒலி வரி

மனம் கொத்திப் பறவை (திரைப்படம்), தேசிங்கு ராஜா (திரைப்படம்), வெள்ளக்கார துரை ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குநர் எழில், இசையமைப்பாளர் டி. இமான் நான்காவது முறையாக இணைந்தனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் இமான் ஆகியோர் இணையும் முதல் திரைப்படமாகும். இதில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது. அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[8]

யுகபாரதி அனைத்துப் பாடல்களையும் எழுதினார். 

மேலதிகத் தகவல்கள் #, பாடல் ...
Remove ads

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads