சராத்தவ் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சராத்தவ் மாகாணம் (Saratov Oblast, உருசியம்: Сара́товская о́бласть, சராத்தொவ்சுக்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் சராத்தவ் நகரம். 2010 ஆம் ஆண்டின் உருசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 2,521,892.[8]
Remove ads
புவியமைப்பு
சராத்தவ் ஓப்லஸ்து ஐரோப்பிய ரசியாவின் தென்கிழக்கிலுள்ள கீழ் வோல்கா வட்டாரத்தின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 575 கிலோமீட்டர்கள் (357 mi), வடக்கு தெற்காக 330 கிலோமீட்டர்கள் (210 mi) என்றவாறு பரவியுள்ளது.
ஓப்லஸ்தின் எல்லைகள்
- தெற்கில் வோல்காகிராத் ஓப்லஸ்து
- மேற்கில் வோரனெழ் ஓப்லஸ்து மற்றும் தாம்பவ் ஓப்லஸ்து
- வடக்கில் பென்சா ஓப்லஸ்து, சமாரா ஓப்லஸ்து, உல்யானவ்ஸ்க் ஓப்லஸ்து, ஒரென்பூர்க் ஓப்லஸ்து
- கிழக்கில் கசக்ஸ்தான்
Remove ads
இயற்கை வளங்கள்
ஓப்லஸ்தில் பல நீர்நிலைகள் உள்ளன. ஓப்லஸ்தை இரண்டாகப் பிரிக்கும் வோல்கா ஆற்றைத் தவிர பல கனிப்பொருணீர்ப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மக்கள் வகைப்பாடு
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இப்பகுதியில், ஒவ்வொன்றிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இருபது இனக்குழுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[8]
- ரசியர்கள் (87.6%)
- கசாக்குகள் (3.1%)
- தாத்தார்கள் (2.2%)
- உக்ரைனியர்கள் (1.7%)
- ஆர்மீனியர்கள் (1.0%)
- அசர்பைஜானியர்கள் (0.6%)
- சுவாஷ் (0.5%)
- மர்தோவியர்கள் (0.4%)
- பாரம்பரிய செருமானியர்கள் (0.3%)
- வெள்ளை ரசியர்கள் (0.3%)
- செசென்கள் (0.2%)
- பிறர் (2.1%)
- ரசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 64,878 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை[12]
சமயம்
2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[13] சராத்தவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 30% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 4% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிறித்தவர்கள் 2% இஸ்லாமியர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மதம், 0.5% இந்து (வேதமுறை, கிருஷ்ணாவியம், தாந்திரியம்) 38% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 16% நாத்திகர்கள், 7.5% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[13]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads