சர்க்கரைப்பந்தல்
கங்கை அமரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்க்கரைப் பந்தல் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண்ராஜ் நடித்த இப்படத்தை கங்கை அமரன் இயக்கினார்.
படக்குழு
- கதை- கஜேந்திரகுமார்.
- திரைக்கதை - சங்கிலி முருகன்.
- படத்தொகுப்பு - சண்முகம்.
- வசனம் - இராணா சங்கர், டி.கே.எஸ். பாபு.
- உதவி இயக்குநர்கள் - ஆர்த்தி அரசு, யோகானந்து, தென்னவன்.
- ஒளிப்பதிவு- தயாளன்.
- தயாரிப்பு - கல்யாணி முருகன்.
நடிகர்கள்
- கல்யாண் குமார் - இராமலிங்கம் - பெரிய முதலாளி, விஜியின் தகப்பன்
- சரண்ராஜ் - விஜி என்கிற விஜய்
- நிஷாந்தி - இராக்காயி, விஜி மனைவி
- சந்திரசேகர் - கருப்பண்ணன்
- சங்கிலி முருகன் - விஸ்வநாதன், விஜியின் சித்தப்பா
- கவுண்டமணி - ஏமாற்றுபவர்
- செந்தில் - பூச்சி, கவுண்டமணியின் கூட்டாளி
- கோவை சரளா - கவுண்டமணியின் மனைவி, பெட்டிக்கடைக்காரர் மகள்
- எம். என். நம்பியார் - கணக்கர்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - காவல் அதிகாரி
- செந்தாமரை - மச்சான்
- பத்மஸ்ரீ - செந்தாமரை மனைவிகளுள் ஒருவர்.
- சத்யா - செந்தாமரை மனைவிகளுள் ஒருவர்.
- அனுஜா - செந்தாமரை மனைவிகளுள் ஒருவர்.
- எஸ். என். பார்வதி
- உசிலைமணி - பொறியாளர் மாத்ரூபூதம்
- பெரியகருப்புதேவர் - வேலைக்காரர்
- ஐ.எஸ்.ஆர்
- சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்
- சேதுபதி
- கரிக்கோல்ராஜன்
Remove ads
கதை
ராமலிங்கம் போஸ்டர் ஒட்டும் தொழிலாளியாக இருந்து கொண்டு உழைத்து படிப்படியாக முன்னேறி தற்பொழுது ஒரு பெரிய முதலாளியாக இருக்கிறார். பல கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்துக் கொண்டு இருக்கும் அவருக்கு, விஜய் என்கிற ஒரு மகனும் திருமணமே செய்து கொள்ளாத விஸ்வநாதன் என்கின்ற தம்பியும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ராமலிங்கம் சேர்த்து வைத்த சொத்தில் சீட்டாட்டம் ஆடுவதும், பெண் மோகம் கொண்டு அலைவதும், மது வகைகளை எடுத்துக் கொள்வதும் என தவறான வழியில் நடக்கின்றனர்.
கோயிலுக்காக 15 ஆயிரம் ரூபாயை ராமலிங்கம் கொடுத்தால் அதில் ஐந்தாயிரத்து எடுத்துக்கொண்டு பத்தாயிரம் மட்டும் கோயிலுக்கு தருகின்றனர். இதனை அறிந்து வேதனைப்படுகின்ற ராமலிங்கம் காரில் செல்லும் பொழுது மாரடைப்பால் தவிக்கிறார். அப்போது அவருக்கு வள்ளலார் நகரில் வசிக்கும் ராக்காயி மற்றும் அவளுடைய அண்ணன் கருப்பண்ணன் ஆகியோர் உதவுகின்றனர். நன்றிக்கடனாக ராக்காயிக்கு தன்னுடைய தொழிற்சாலையில் ஒரு வேலை போட்டு தருகிறார் ராமலிங்கம்.
தான் இறக்கும் தருவாயில் ராமலிங்கம் அவர்கள் ராக்காயிக்கு தன்னுடைய சொத்தினை சேருமாறு எழுதி வைக்கிறார். அதுவும் ஒரு வருடத்திற்குள் தன்னுடைய மகன் விஜய் ராக்காயி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை வைக்கிறார். உடன் டெல்லியில் இருந்து அவருடைய நண்பரும் விசுவாசியுமான நம்பியாரை கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளவும் தன்னுடைய மகனை நல்வழிப்படுத்தவும் அழைத்து வருகிறார்
ராமலிங்கம் இறக்கும்பொழுது ராக்காயிக்கு தன்னுடைய சொத்தினை எழுதி வைத்தது அறிந்து அவருடைய மகனும் தம்பியும் இறுதி மரியாதை செலுத்தாமல் சென்று விடுகின்றனர். அவர்களுடைய தீய எண்ணங்களை அறிந்த நம்பியார் ராக்காயியை நன்கு படித்த பெண்ணாக மாற்றி விஜய்க்கு திருமணம் செய்து வைக்கிறார். தொடக்கத்திலிருந்து ராக்காயி மீது கோபமாக இருக்கும் விஸ்வநாதன் ராக்காயியை கொல்ல அவளுக்கு தருகின்ற காபியில் சயனைடு கலக்கச் சொல்கிறார். சமையல்காரர் சைனைடி மோரில் கலந்து தர அதனை அறியாது மோரை குடித்துவிட்டு விஸ்வநாதன் இறக்கிறார்.
ராக்காயியை கொல்ல மகிழுந்தில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தினை விஸ்வநாதன் வைத்துள்ளார். விஸ்வநாதனை காப்பாற்ற செல்லக்கூடிய விஜயை ஆபத்திலிருந்து காப்பாற்றி ராக்காயி விஜயின் மனதில் இடம் பிடிக்கின்றார்.
இசை
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads