கங்கை அமரன்

இந்தியத் திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கங்கை அமரன் (Gangai Amaran) தமிழ்த் திரைப்படங்களில் ஓர் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குநராகவும் பன்முகத் திறமை காட்டியவர். பல தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும், நடிகர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.[1] கங்கை அமரன் தணிக்கைக் குழு உறுப்பினராகவும், பா.ஜ.க. கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். 2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த இடைத்தேர்தல் இரத்து செய்யப்பட்டது.

விரைவான உண்மைகள் கங்கை அமரன், இயற்பெயர் ...
Remove ads

இளவயது

கங்கை அமரன், இளையராஜா, "பாவலர்" வரதராஜன் ஆகியோர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மேடைகளில், கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களையும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முறைகளை, பாடல்கள் மூலம் விமர்சித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் வந்தனர்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

கங்கை அமரன் தமிழ்நாடு, தேனி, பண்ணைப்புரத்தில், 1947 திசம்பர் 8 அன்று பிறந்தார். இவர் டேனியல் இராமசாமி, சின்னத்தாயி ஆகியோரின் இளைய மகனாவார். இவர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி. வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தை ஆவார். கங்கை அமரனுக்கு இரண்டு அண்ணன்களான ஆர். டி. பாஸ்கர், பாவலர் வரதராஜன் ஆகிய இருவரும் நீண்ட காலத்திற்கு முன்பே இறந்தனர். இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பாடகி பவதாரிணி, ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் இவரது உறவினர்களாவர்.

இவரது பெயரைப் பொறுத்தவரை, கங்கை அமரன் என்ற பெயர் குழந்தைப்பருவத்தில் படித்த அதே பெயர் ஒரு பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அமரன் அமர் சிங் என்ற புனைப்பெயரிலும் அறியப்பட்டார். இவர் ஒரு பாடலாசிரியராக இருக்க வேண்டும் என்று விரும்பினார். டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சித்ரா இலட்சுமணனுடனான இவரது அண்மைய நேர்காணல், இவர் தனது வாழ்க்கை அனுபவங்களையும், இவரது தொழில் போராட்டத்தையும், தனது அண்ணன் இளையராஜாவுடனான தனிப்பட்ட வேறுபாடுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அங்கு இவர் தனது வாழ்க்கையில் பல சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Remove ads

தொழில்

இவரது சகோதரர் இளையராஜாவோடு இணைந்து பங்காற்றினார். பின்னாளில் கங்கை அமரன் ஓர் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் அமைந்த பதினாறு வயதினிலே திரைப்படத்தில் செந்தூரப் பூவே பாடலை இயற்றினார். அதைத் தொடர்ந்து தன்னுடைய அண்ணன் இளையராஜா இசையமைத்த பல திரைப்படங்களுக்கு பாடலாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் எம். எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையில் பாடல்களை இயற்றியுள்ளார். மௌன கீதங்கள், வாழ்வே மாயம் (1983) போன்ற பல சிறந்த திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இசையமைப்பதைத் தவிர, கோழி கூவுது (1982) திரைப்படத்தில் அமரன் இயக்குநராக அறிமுகமானார். மிகவும் வெற்றிகரமான கரகாட்டக்காரன் (1989) உட்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தெம்மாங்கு பாட்டுக்காரன் இவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும். அதே நேரத்தில் இவரது மகன் வெங்கட் பிரபு நடிகராக அறிமுகமாகவிருந்த பூஞ்சோலை திரைப்படம் வெளியிடப்படவில்லை. இப்போது இவர் கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் பணிபுரிகிறார்.

திரைப்படங்கள்

திரைக்கதை ஆசிரியர்/இயக்குநர்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

இசையமைத்த திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், ஆண்டு ...
Remove ads

இவரது பாடலாசிரியர் பணி

1970களில்

1980களில்

1990களில்

2000த்தில்

2010த்திற்கு பிறகு

Remove ads

பின்னணிக்குரல்

இவர் நடித்த திரைப்படங்கள்

இவர் பாடிய பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads