சலஞ்சர் ஆழம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சலஞ்சர் ஆழம் (Challenger Deep) என்பது கடலில் அளவீடு செய்யப்பட்ட மிக ஆழமான புள்ளியைக் குறிக்கிறது. இது, ஏறத்தாழ 11,000 மீட்டர் (36,000 அடிகள்) ஆழத்தில் உள்ளது. அளவீட்டில் ஏற்படக்கூடிய பிழை 100 மீட்டர்களுக்கும் குறைவே.[1][2] இவ்விடம் மரியானா தீவுகள் இருக்கும் பகுதியில் மரியானா அகழியின் தென் முனையில் அமைந்துள்ளது. இதற்கு அண்மையிலுள்ள நிலப்பகுதிகளாக தென்மேற்கே 289 கி.மீ. தொலைவில் ஃபைசு தீவும், வடகிழக்கே 306 கி.மீ. தொலைவில் குவாமும் உள்ளன.[3] 1872-76 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய அரச கடற்படை அளவைக் கப்பலான எச்.எம்.எஸ் சலஞ்சர் என்பதன் பெயரைத் தழுவியே இவ்விடத்துக்குப் பெயர் இடப்பட்டது.

இதுவரை நான்கு கலங்களே இப்பகுதியில் இறங்கியுள்ளன. முதலில் 1960 ஆம் ஆண்டில் டிரியெஸ்ட் (Trieste) என்னும் ஆளேற்றிய கலம் இறங்கியது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் சப்பானிய கைக்கோ என்னும் ஆளில்லாத் தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலமும், 2009 இல் நேரெயசு என்னும் கலமும் 2012 ஆம் ஆண்டில் டீப்சீ சலஞ்சர்[4][5][6] என்னும் ஆழ்கடல் நீர்மூழ்கிக்கலனும் இப்பகுதியில் இறங்கியுள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads