டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு

From Wikipedia, the free encyclopedia

டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு
Remove ads

டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு (Bathyscaphe Trieste) என்பது சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்ட ஆழ நீர்மூழ்கும் ஆய்வுப்படகு ஆகும். இது இருவரை ஏற்றிச் செல்லக்கூடியது. 1960 ஆம் ஆண்டில் 10,900 மீட்டர்கள் ஆழம் கொண்ட உலகின் மிகவும் ஆழமான கடல் பகுதியான சலஞ்சர் ஆழம் என்னும் பகுதிக்குச் சென்று இது சாதனை படைத்தது.

விரைவான உண்மைகள் கப்பல் (இத்தாலி), கப்பல் (அக்கிய அமெரிக்கா) ...
Remove ads

வடிவமைப்பு

டிரியெஸ்ட், சுவிஸ் அறிவியலாளரான அகஸ்ட்டே பிக்கார்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டு இத்தாலியில் கட்டப்பட்டது. இதன் அமுக்கக்கலம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இதன் மேற்பகுதி இத்தாலி, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகில் அமைந்த, சுதந்திர நகரான டிரியெஸ்டில் செய்யப்பட்டதால் இதற்கு டிரியெஸ்ட் என்னும் பெயர் இடப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடுநிலக் கடல் பகுதியில் அமைந்த காப்ரித் தீவுக்கு அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. பல ஆண்டுகள் நடுநிலக் கடல் பகுதியில் இயங்கியபின்னர் 1958 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையினால் $250,000 விலை கொடுத்து வாங்கப்பட்டது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads