சலீம் குமார்

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

சலீம் குமார்
Remove ads

சலீம் குமார் (Salim Kumar) (பிறப்பு 10 அக்டோபர் 1969) ஒரு இந்திய நடிகரும், நகைச்சுவை நடிகரும், இயக்குநரும், மலையாளத் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.[1] பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களுக்கு பெயர் பெற்ற சலீம் குமார், மலையாளத் திரைப்பட வரலாற்றில் சிறந்த மற்றும் மிக முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.[2]

விரைவான உண்மைகள் சலீம் குமார், பிறப்பு ...

தனது பிற்கால வாழ்க்கையில், குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் வெற்றி கண்டார். 2010 ஆம் ஆண்டு ஆதாமிண்டெ மகன் அபூ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றார் (இத் திரைப்படம் ஆண்டிற்கான கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றது). இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படமான கருத்த ஜூதன் சிறந்த கதைக்கான 2017 கேரள மாநில திரைப்பட விருதை வென்றது. அச்சன் உறங்காத வீடு (2005) படத்திற்காக இரண்டாவது சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும், சிறந்த நடிகருக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருதையும் (2013) வென்றுள்ளார்.[3]

Remove ads

சொந்த வாழ்க்கை

குமார் வடக்கு பறவூர்-எர்ணாகுளம் மாவட்டத்தில் "சிரிக்கும் வில்லா" என்ற வீட்டில் வசிக்கிறார். இவருக்கு சுனிதா என்ற மனைவியும் சந்து, ஆரோமல் என இரு மகன்களும் உள்ளனர்.[4] இவர் கேரளாவில் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக உள்ளார். ஈஸ்வர வழக்கிள்ளெல்லோ என்ற நினைவுக் குறிப்பை எழுதியுள்ளார். கொச்சின் ஸ்டாலியன்ஸ் என்ற பலகுரல் குழுவை நடத்துகிறார். இது ரமேஷ் பிஷாரடி போன்ற பல திறமைகளை அறிமுகப்படுத்தியது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads