டி. எஸ். சௌந்தரம்
இந்திய தேசிய காங்கிர அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி. எஸ். சௌந்தரம் (ஆகத்து 18, 1904 - அக்டோபர் 21, 1984) இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.[1]
பிறப்பு
இவர் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில் சுந்தரம்-இலட்சுமி அம்மா அம்மாளுக்கு மகளாக 1904 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று பிறந்தார். இவரது தந்தையார் தி. வே. சுந்தரம் தென்னிந்தியாவின் பிரபலமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் ஆவார். சௌந்திரம் திருக்குறுங்குடியில் உள்ள பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். முத்தையா பாகவரிடம் வீணை இசை கற்றார். தமது 10 ஆவது வயதில் வாய்ப்பாட்டிலும் வீணையிலும் தேர்ச்சி பெற்றார்.[2] 12-ஆம் வயதில் இவருக்குத் திருமணம் ஆகியது. ஆனால் விரைவிலேயே அவர் விதவை ஆனார். கணவர் டாக்டர் சுந்தரராஜன் இறக்கும் போது, சௌந்தரம் வீட்டில் இருக்கக் கூடாது என்றும் படித்து நாட்டுக்கு சேவை செய்ய வெண்டும் எனவும் அவரிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டார். கைம்பெண்ணான தன் மகளை தந்தை சுந்தரம் தில்லிக்கு அனுப்பி அங்கு மருத்துவம் படிக்க வைத்தார்.[3] 1936 இல் மருத்துவராகப் பட்டம் பெற்றார். மதுரையில் சொந்தமாக இலவச மருத்துவமனையை ஆரம்பித்தார். கிராமப்பகுதிகளில் காங்கிரசு கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரிசன சேவை சங்கத்தைச் சேர்ந்த ஜி. இராமச்சந்திரன் என்பவரைக் காதலித்து மகாத்மா காந்தியின் ஆசியுடன் அவரை மறுமணம் செய்தார்.
Remove ads
பணிகள்
இவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு காந்தியடிகளின் அரிசன் இயக்கத்தில் இணைந்தார். காந்தியடிகள் இவரை கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியப் பிரதிநியாக நியமித்தார். இவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் தொடங்கிய காந்தி கிராம அறக்கட்டளை 1976 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற காந்திகிராம பல்கலைக்கழகமாக மாறியது. 1952 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார். 1962 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின் சவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அமைச்சரவையில் துணைக் கல்வி அமைச்சரானார்.[2] கட்டாய இலவச ஆரம்பக்கல்வியை அறிமுகம் செய்தார்.
1962 ஆம் ஆண்டில் பத்மபூசன் விருது பெற்றார்.[1] இந்திய அரசு 2005 இல் தி. சு. சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டது.[4]
டி. எஸ். சௌந்தரம், 3 சனவரி 1980 முதல் 21 அக்டோபர் 1984 முடிய காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார்.[5]
Remove ads
மறைவு
21-10-1984 ஆம் ஆண்டு மறைந்தார்.[2]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads