சாகர்மாதா மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாகர்மாதா மண்டலம் (Sagarmāthā zone) (நேபாளி: सगरमाथा अञ्चलⓘ) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். சாகர்மாதா மண்டலம் கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராஜ்பிராஜ் நகரம் ஆகும்.

இம்மண்டலத்தில் நேபாள மொழி, மைதிலி மொழி, திபெத்திய மொழி மற்றும் பழங்குடி மக்களின் மொழிகள் பேசப்படுகிறது.
Remove ads
மாவட்டங்கள்
இம்மண்டலத்தின் வெளித் தராய் சமவெளிகளில் சப்தரி மாவட்டம் மற்றும் சிராஹா மாவட்டங்களும், உள்தராய் சமவெளிகளில் உதயபூர் மாவட்டமும், மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளில் கோடாங் மாவட்டம் மற்றும் ஒகல்டுங்கா மாவட்டங்களும், இமயமலைப் பகுதியில் சோலுகும்பு மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் உள்ளது.
புவியியல்
இம்மண்டலத்தின் தெற்கில் தராய் சமவெளிகளும், நடுவில் மலைப்பாங்கான மேட்டு நிலங்களும், வடக்கில் எவரெசுட்டு சிகரம் அமைந்த இமயமலைப் பகுதிகள் உள்ளது. இம்மண்டலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலமும், கிழக்கில் கோசி மண்டலமும், மேற்கில் ஜனக்பூர் மண்டலமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
சாகர்மாதா மண்டலத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் அமைந்த உலகப் பாராம்பரியக் களமான சாகர்மாதா தேசியப் பூங்காவும், உலகின் பெரிய கொடுமுடியான எவரெஸ்ட் சிகரமும் உலகப் புகழ் பெற்றது.
Remove ads
தட்ப வெப்பம்
சாகர்மாதா மண்டலத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஏழு நிலைகளில் காணப்படுகிறது. [1]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads