சாகிவால் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

சாகிவால் மாவட்டம்map
Remove ads

சாகிவால் மாவட்டம் (Sahiwal District), இதன் பழைய பெயர் மாண்டிகோமெரி மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சாகிவால் ஆகும். இம்மாவட்டம் சாகிவால் மாட்டினங்களுக்கு பெயர் பெற்றது.[1] இம்மாவட்டம் இரண்டு தாலுகாக்களைக் கொண்டது. சிந்துவெளி நாகரித்தின் அரப்பா தொல்லியல் களங்களை இம்மாவட்டம் கொண்டுள்ளது.[2]சிந்து ஆறு பாய்வதால் இம்மாவட்ம் நீர் வளம் மிக்கது.

விரைவான உண்மைகள் சாகிவால் மாவட்டம் ضِلع ساہِيوالமாண்டிகோமெரி மாவட்டம், நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 3,201 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சாகிவால் மாவட்டத்தின் மக்கள் தொகை 25,13,011 ஆகும். அதில் ஆண்கள் 1,276,646, பெண்கள் 1,236,119 மற்றும் திருநங்கைகள்/நம்பிகள் 246 அக உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 785.1 பேர் வீதம் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் சராசரி எழுத்தறிவு உடையோர் 1,143,059 மட்டுமே. இம்மாவட்டத்தில் மேற்கு பஞ்சாபியை பேசுபவர்கள் 24,63,603 (98%) ஆகும். உருது, சிந்தி, பலூச்சி, காஷ்மீரி, சராய்கி, இந்துகோ, பிராய்கி, பஷ்தூ போன்ற மொழிகளைப் பேசுபவர்கள் 2% ஆகவுள்ளனர்.[3]

Remove ads

தட்ப வெப்பம்

இம்மாவட்டத்தின் கோடைக்கால வெப்பம் 45–50 பாகை செல்சியஸ் ஆகவும்; குளிர்கால வெப்பம் 5-10 பாகை செல்சியசாகவும் இருக்கும். இதன் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 2000 மில்லி மீட்டர் ஆகும்.

கல்வி

  • சாகிவால் பொது பள்ளி & கல்லூரி
  • அரசு பட்டமேற்படிப்புக் கல்லூரி, சாகிவால்
  • இராணுவப் பொதுப்பள்ளி & கல்லூரி, சாகிவால்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads