சாக்கியர் (கேரள சமூகம்)
கேரள சமூகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாக்கியர் (Chakyar) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் இந்துக்களின் அம்பலவாசி சமூகத்தின் கீழ் வரும் ஒரு இடைநிலை பூசாரி சாதியாகும். இந்த சாதியைச் சேர்ந்த பெண்கள் இல்லோட்டம்மா என்று அழைக்கப்படுகிறார்கள்.

கோயிலின் விவகாரங்களை நிர்வகிப்பதில் இந்துக் கோவிலில் அவர்கள் ஒரு இடத்தைப் பிடித்துள்ளனர். ஆனால் விழாக்களை உண்மையாக நடத்துபவர்களாக அல்ல. இந்தியாவில் எஞ்சியிருக்கும் ஒரே பண்டைய சமசுகிருத நாடக வடிவமான சக்க்கைக் கூத்து மற்றும் கூடியாட்டம் எனப்படும் புனிதக் கோவில் சடங்கு செயல்திறன் மூலம் மட்டுமே அவை காணப்படுகின்றன.
இவர் கோயிலுக்குள் அல்லது கூத்தம்பலங்களில் சடங்கு கூத்துகளும் மற்றும் கூடியாட்டங்களை நிகழ்த்தும் முக்கிய நடிகராவார். இவர்களது பெண்கள் இல்லோட்டம்மா என அழைக்கப்படுகின்றனர். ஆனால் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. நங்கையரம்மா எனப்படும் பெண் வேடங்களை நம்பியார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் செய்கிறார்கள். நம்பியார்கள் மிழாவு என்ற பெரிய செப்பு பறை இசைக்கருவியான வாசிப்பவர்கள்.
கேரளா முழுவதும் 18 சாக்கியர் குடும்பங்கள் இருந்தன. ஆனால் இப்போது அவற்றின் எண்ணிக்கை குறுகிவிட்டது. அவற்றில் மணி குடும்பமும் ஒன்று. கேரளாவின் போற்றத் தக்க கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞரான மணி மாதவ சாக்கியரும் ஒருவராவார். சமசுகிருதம் கற்ற இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில், குறிப்பாக சிருங்கார ரசத்தை அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்து விளங்கியவர். இவர் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்துக் கலையாட்டத்தில் தலைசிறந்து விளங்கியவர். இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில் அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்தவர்.
Remove ads
மேலும் காண்க
ஆதாரங்கள்
- Natyakalpadrumam, by Guru Mani Madhava Chakyar,1975.
வெளி இணைப்புகள்
- Śāstrī, V. Venkatarāma Śarmā (1 January 1926). "Aj amila-Moksa-Prabandha of Narayana Bhatta". Bulletin of the School of Oriental Studies, University of London 4 (2): 295–300.
- Shree Painkulam Raman Chakyar
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads