மணி தாமோதர சாக்கியர்
கேரள கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணி தாமோதரா சாக்கியர் (Mani Damodara Chakyar ) (1946 – ) இவர் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரு கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற குருவான நாட்டியாச்சார்யா விதுசாகரத்னம் பத்மசிறீ மணி மாதவ சாக்கியரின் மருமகனும் மற்றும் சீடரும் ஆவார். இவர் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து ஆகியவற்றின் சிறந்த மணி சாக்கியர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவராவார்.[1]
சாக்கைக் கூத்து மற்றும் கூடியாட்டத்தில் மணி மாதவ சாக்கியார் நேரடி வழிகாட்டுதலின் கீழ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய வழியில் இவர் படித்தார். அவர் சமசுகிருதம் மற்றும் நாட்டியசாத்திரத்தை பாரம்பரிய முறையில் பயின்றார். சமசுகிருத இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற்றுள்ளார். இவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் சமசுகிருத ஆசிரியராக இருந்தார்.[2]

Remove ads
பயிற்சி
இவர் புகழ்பெற்ற குருவான பத்மஸ்ரீ மனி மாதவ சாக்கியரின் கூடியாட்டம் குழுவில் உறுப்பினராக இருந்தார். இது முதல் முறையாக கேரளாவிற்கு வெளியே கூட்டியாட்டத்தை நிகழ்த்தியது. 1962இல் சென்னையில் நடந்த தோரணாயுத கூடியாட்டத்தில் இவரது குரு மணி மாதவ சக்கியாருடன்(இராவணன்) விபீடணன் வேடத்தில் நடித்தார். இவர் பாரம்பரிய பக்தி கூத்துகள் மற்றும் கூடியாட்டங்களான அங்குலியங்கம், மத்தவிலாச பிரகாசானம், மந்திராங்கம், எழமாங்கம் (ஆச்சார்யச்சுதமணியின் ஏழாவது செயல்) ஆகியவற்றில் நிபுணராக இருந்தார்.

Remove ads
புகழ் பெற்ற கோயில்களில் நிகழ்ச்சி
இவர் பல தசாப்தங்களாக கேரளாவின் புகழ்பெற்ற கோயில்களில் இந்த பக்தி சடங்கான கூத்து மற்றும் கூடியாட்டம் ஆகியவற்றைக் கொண்ட மணி குடும்பத்தைச் சேர்ந்த அதியந்தரா கூத்து (பண்டைய காலங்களிலிருந்து குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட கூத்துகள்) நிகழ்த்துகிறார். புகழ்பெற்ற கோவில்களில் கண்ணூர் மாவட்டத்தின் கரிவெல்லூர் சிவன் கோயில்; மதயிக்காவு பகவதி கோவில், தளிப்பறம்பா ராஜராஜேஸ்வரர் கோவில், கொட்டியூர் பெருமாள் கோயில், கஞ்சிரங்காடு சிவன் கோயில், திருவாங்காடு சிறீ இராமசாமி கோயில் மற்றும் தலச்சேரி மற்றும் செருகுன்னு சிராய்கள் பகவதி கோயில்; இலோகனர்காவு கோயில் வடகரை, தாலி சிவன் கோயில், சிறீ திரிவிலயனாடுகாவு பகவதி கோயில் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தின் திருவச்சிரா சிறீ கிருட்டிணன் கோயில்; திருநாவாய் நவ முகுந்தன் கோயில், திரிகண்டியூர் சிவன் கோயில், மெத்ரிகோவில் சிவன் கோயில், கோட்டக்கலின் பாண்டமங்கலம் கிருட்டிணன் கோயில் மற்றும் மலப்புறம் மாவட்டத்தின் கோட்டக்கல் விஸ்வாம்பரம் (சிவன்) கோயில்; பனமண்ணை சங்கரநாராயணன் கோயில், கல்லெக்குளகரம் ஏமூர் சிவன் கோயில், திருவேகப்புறா சிவன் கோயில் மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் கில்லிக்குருச்சி மகாதேவர் கோயில் மற்றும் திரிபிரயூர் சிறீ இராமன் கோயில் மற்றும் திருச்சூர் கோயிலின் செர்புவின் பெருவனம் சிவன் கோயில் ஆகியவை அடங்கும்.

இவர் கேரளாவிற்கு வெளியே புது தில்லி, வாரணாசி, மும்பை, உஜ்ஜைன், போபால் மற்றும் சென்னை போன்ற இடங்களில் கூடியாட்டங்களை நிகழ்த்திய மணி மாதவ சாக்கியரின் குழுவில் உறுப்பினராக இருந்தார். வாரணாசி, பெங்களூர் மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் நடந்த உலக சமசுகிருத மாநாடுகள் போன்ற பல முக்கியமான மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் நல்ல வாய்ப்பு இவருக்கு இருந்தது.
Remove ads
கதாநாயகனாக
சுவப்னவாசவதத்தம், நாகானந்தம், சுபத்ரதானஞ்சியம் போன்ற கூடியாட்டங்களில் கதாநாயகன் மற்றும் விதூசகன் ஆகிய இரு வேடங்களையும் இவர் நிகழ்த்தியுள்ளார். கூடியாட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக காளிதாசரின் மாளவிகாக்கினிமித்திரம் மற்றும் விக்கிரமோவர்சியம் ஆகியவற்றை மணி மாதவ சாக்கியர் நடனமாடி இயக்கியபோது, நாயகனின் பாத்திரத்தை இவருக்கு வழங்கினார். மணி தாமோதரா சாக்கியர் தனது குருவின் வழிகாட்டுதலின் கீழ் உஜ்ஜைனியின் காளிதாசர் அகாதமியில் மாளவிகாக்கினிமித்ரம் மற்றும் விக்கிரமோவர்சியம் ஆகியவற்றை அரங்கேற்றினார்.
கௌரவங்கள்
புதுதில்லி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து உதவித்தொகை பெற்ற முதல் கூடியாட்டம் மாணவர் இவர். பின்னர், இதே துறையால் இவருக்கு வழங்கப்பட்ட இளையோர் மற்றும் மூத்தோர் கூட்டாளர் விருதும் வழங்கப்பட்டது. மேலும், கோயில்கள் மற்றும் பல கலாச்சார அமைப்புகளிடமிருந்து பல பரிசுகளைப் பெற்ற்றுள்ளார். சாக்கியர் கூத்து மற்றும் கூடியாட்டம் (2000) ஆகியவற்றுக்கான பங்களிப்புகளுக்காக கேரள சங்கீத நாடக அகாதமி இவருக்கு விருது வழங்கியது. 2007 ஆம் ஆண்டிற்கான கேரள கலாமண்டலம் வி. எஸ். சர்மா அறக்கடளை விருதைப் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டில், கூடியாட்டத்துக்கான கலாமண்டலம் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3]
Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads