சாட்டை (திரைப்படம்)
எம். அன்பழகன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாட்டை சமுத்திரக்கனி நடிப்பில் 2012 செப்டம்பரில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை தயாரித்தவர் இயக்குநர் பிரபு சாலமன். பிரபு சாலமனிடம் 'மைனா' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருக்கும் முதல் படம் இதுவாகும்.
Remove ads
கதை சுருக்கம்
மாவட்டத்திலேயே ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றுக்கு பணி மாற்றம் செய்யப்படும் இயற்பியல் ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி), அந்த பள்ளியின் நிலையை மாற்ற தலைமை ஆசிரியர் (ஜூனியர் பாலையா) துணையோடு பல மாற்றங்களை செய்கிறார். துணை தலைமை ஆசிரியர் சிங்கபெருமாள் (தம்பி இராமைய்யா) உள்ளிட்ட மற்ற ஆசிரியர்கள் தயாளனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தயாளன் தன் அணுகுமுறையால் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராகவும் ஆகி விடுகிறார்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான பழனி (யுவன்), தனது சக வகுப்பு மாணவி அறிவழகியை (மகிமா) காதலிப்பதாகச் சொல்லி அவருக்கு தொந்தரவு கொடுக்க, ஒரு கட்டத்தில் அறிவழகி விசம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அறிவழகி விசம் குடித்ததற்குக் காரணம் ஆசிரியர் தயாளன் தான் என்று புரிந்துகொள்ளும் அறிவழகியின் குடும்பத்தார் தயாளனை அடித்து காவலர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
மாணவியின் தற்கொலை முயற்சிக்குத் தான் காரணம் அல்ல என்பதை தயாளன் நிரூபித்து பல தடைகளை முறியடித்து அந்தப் பள்ளியை நல்ல நிலைமைக்கு கொண்டுவருகிறார்.
Remove ads
நடிகர்கள்
- சமுத்திரக்கனி - தயாளன், ஆசிரியர்
- தம்பி ராமையா - சிங்கம் பெருமாள்
- யுவன் - பழனிமுத்து
- மகிமா நம்பியார் - அறிவழகி, மாணவி
- ஜூனியர் பாலையா - பாண்டியன், தலைமை ஆசிரியர்
- ஸ்வத்திகா - தயாளன் மனைவி
- பாண்டி - முருகன்
- பிரேம்
- ஜீவா ரவி
- டோனி கிருஷ்டோபர்
இசை
இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார்.[1]
விருதுகள்
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads