பிரேம் குமார்

தென்னிந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரேம் குமார் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர், மேலும் ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி நடனடன நிகழ்ச்சியின் பருவம் ஒன்றில் வெற்றியாளருமாவார். 18 அக்டோபர் 2015 அன்று நடைபெற்ற தென்னிந்திய நாடிகர் சங்கத் தேர்தலில், செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இரமநாதபுரத்தின் மன்னரான சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் பேரன் ஆவார்.

விரைவான உண்மைகள் பிரேம் குமார், பிறப்பு ...
Remove ads

தொழில்

கே. பாலசந்தர் தயாரித்து, சமுத்திரக்கனி இயக்கிய அண்ணி என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரேம் நடிகராக அறிமுகமானார். மு. கருணாநிதி அண்ணாமலை என்ற தொலைக்காட்சி தொடரில் இவரின் நடிப்பைப் பார்த்து, கருணாநிதியின் கண்ணம்மா புதினத்தின் திரைப்பட பதிப்பில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார்.[1] அப்படம் 2005 இல் சராசரி விமர்சனங்களுடன் வெளியானது.[2]

இவர் ஜோடி நம்பர் ஒன்னின் பருவம் ஒன்றில் அண்ணாமலையில் தொடரில் தனது துணை நடிகையான பூஜாவுடன் கலந்துகொண்டார். பருவம் ஒன்றில் வெற்றிபெற்றார். மேலும் தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து திரைப்படங்களில் நடிக்கச் செல்வதாக அறிவித்தார்.[3] அதன் பின்னர் இவர் நேபாளி (2008), உன்னைப்போல் ஒருவன் (2009), வல்லக்கோட்டை (2010) உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது மைத்துனர் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா ஆவார்.

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

தொலைக்காட்சி

தொடர்கள்
யதார்த்த நிகழ்ச்சிகள்
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads