சாணார்

குடும்பப் பெயர் From Wikipedia, the free encyclopedia

சாணார்
Remove ads

சாணார் அல்லது சான்றோர் (Channar or Chandor) என்பது கேரளாவின் ஈழவர் இலங்கையில் நளவர் மற்றும் தமிழ் நாட்டில் சாணார் /நாடார் இனத்தினர் ஆவார். தமிழ் நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கேரளாவின் ஆலப்புழை மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிக அளவில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் காணப்பட்டனர். ஆய் அரசில் இருந்த சாணார்கள் பாரசீகக் கிறிஸ்தவர்களைத் தாக்கக் கூடாது என்பதற்கான உத்தரவை வழங்கியதாக 1849 ஆம் ஆண்டின் தரிசப்பள்ளித் தகடுகள் காட்டுகின்றன. சாணார்கள் மலையாளத்தில் கொல்லத்தவர் என்றும் அழைக்கப்பட்டனர். சாணார் சமூகத்தின் உயர்ந்தவர்களாகவும் இருந்தனர்.[1][2] இவர்கள் கிராமத்தலைவனாக இருந்தனர். அவர்களுக்குப் பின்னர் அந்தப் பொறுப்பு அவர்களின் மருமகனுக்கு (மருமக்கதாயம்) வழங்கப்பட்டது.[3] ஈழவச் சாணார்கள் ஆங்கிலேயர்களுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர்.[4] சாணார்கள் திருமணம் போன்ற சடங்குகளை நடத்தும் பொறுப்பு வகித்தனர். அதற்குக் கூலியாக புகையிலையைப் பெற்றுக் கொண்டனர்.[3]

Thumb
19 ஆம் நூற்றாண்டில் வில்லுப்பாட்டு இசைக்கும் ஈழவர்/சாணார்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads