சாந்தோம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தோம் (Santhome) சென்னையில் மைலாப்பூர் பகுதியில் உள்ள ஓர் சுற்றுப்புறப் பகுதியாகும். சான் தோம் என்ற சொற்கள் செயிண்ட் தாமசு என்ற கிறித்தவ புனிதரின் பெயரை ஒட்டி எழுந்தது. உள்ளூர் கிறித்தவர்களின் நம்பிக்கையின்படி இயேசு கிறித்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி 52ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். கி.பி 72ஆம் ஆண்டு சென்னையின் மற்றொரு சுற்றுப்புறப்பகுதியான செயிண்ட் தாமசு மவுண்ட் பகுதியில் உயிர்தியாகம் செய்து இங்கு அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி மீது சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு இத்தாலிய உலகப்பயணி மார்கோ போலோ 1292ஆம் ஆண்டு வருகை புரிந்து தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார்.

இப்பகுதியில் பல கல்விக்கூடங்கள் அமைந்துள்ளன. அவற்றில் சில: ரோசரி மெட்ரிக்குலேசன் பள்ளி, செயிண்ட்.பீட் பள்ளி, சாந்தோம் இடைநிலைப் பள்ளி, செயிண்ட் ராஃபேல்சு பள்ளி மற்றும் டோமினிக் சாவியோ பள்ளி. சென்னை மறைப் பேராயரின் அலுவல்முறை குடியிருப்பும், மயிலாப்பூர் மறை பேராயமும் தேவாலயத்தை அடுத்து உள்ளது. உருசியா மற்றும் இசுப்பானிய நாட்டு துணைத் தூதரகங்களும் இங்கு உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads