சாமுராய் (திரைப்படம்)
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமுராய் (Samurai) 2002 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி திகில் திரைப்படமாகும். பாலாஜி சக்திவேல் எழுதி இயக்குநராக அறிமுகமாயுள்ளார். எசு. ஸ்ரீராம். இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்தார். அனிதா அசானந்தனி, ஜெயா சீல் மற்றும் நாசர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை சேது ஸ்ரீராம் கையாண்டுள்ளார், இசையை ஆரிசு ஜெயராஜ் அமைத்துள்ளார்.
சாமுராய் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2001 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் தொடங்கியது. ஆனால் தயாரிப்பு தாமதங்கள் காரணமாக, படம் ஜூலை 2002 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.[1]
Remove ads
தயாரிப்பு
2001 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் விக்ரம் இந்தப் படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1999 ஆம் ஆண்டில் வெளியான பாலாவின் சேது திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் உறுதியளித்த முதல் முயற்சி இதுவாகும்.[2] வட இந்திய மாடல் அனிதா அசானந்தனி இந்தப் படத்தில் அறிமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அனிதா அசானந்தனி நடித்த வருஷமெல்லாம் வசந்தம் என்ற மற்றொரு படம் சாமுராய் படத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads